மனைவியின் கிட்னியை விற்று இரண்டாவது திருமணம் செய்த கணவன்

 
r

 மனைவியின் கிட்னியை விற்று இரண்டாவது திருமணம் செய்துள்ளார் கணவர்.   நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் இந்த உண்மை தெரிய வந்ததால் மிகவும் வேதனைப்பட்ட மனைவி,  பெங்களூருவில் 2வது மனைவியுடன் உல்லாசமாக இருந்த  கணவர் மீது போலீசில் புகார் அளிக்க பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார் .

ஒடிசாவில் கோட மேட்டா என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் கந்து.  இவரது மனைவி ரஞ்சிதா.   பிரசாந்த் கந்து வங்கதேசத்தில் இருந்து அகதியாக வந்தவர்.  ரஞ்சிதாவுக்கும் பிரசாந்துக்கும் திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகின்றன.    இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

 மதுவுக்கு அடிமையான பிரசாந்த் குடும்பத்தின் மீது அக்கறை இல்லாமல் இருந்து வந்திருக்கிறார்.   இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டில் சம்பாதிக்காமலேயே உல்லாச வாழ்க்கை வாழ ஆசைப்பட்டிருக்கிறார் பிரசாந்த்.    இதற்காக மனைவிக்கு கிட்னியில் கல் இருப்பதாக சொல்லி அவரை நம்ப வைத்து கிட்னியில் உள்ள கற்களை அகற்ற சிகிச்சை என்று அவரை அழைத்துச் சென்று தனியார் மருத்துவமனையில் அவரின் கிட்னியை எடுத்து விற்பனை செய்து உள்ளார் கணவர்.

pr

 தன் உடல் நலத்தின் மீது இவ்வளவு அக்கறை காட்டுகிறார் கணவர் என்று பாசத்தில் ரொம்ப மகிழ்ச்சியுடன் இருந்திருக்கிறார் ரஞ்சிதா.  ஆனால் மருத்துவர்களுடன் போட்ட ரகசிய ஒப்பந்தத்தின்படி மனைவியின் சிறுநீரகத்தை விற்பனை செய்த பின்னர்,  அந்த பணத்தில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார் பிரசாந்த்.

 நான்கு ஆண்டுகளாக ஒரே கிட்னியுடன் வாழ்ந்து வந்திருக்கிறார் ரஞ்சிதா.   இந்த நிலையில் திடீரென்று அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு இருக்கிறது. இதை அடுத்து அவர் மருத்துவமனைக்குச் சென்றபோதுதான் ,  பரிசோதனையில் ஒரே ஒரு கிட்னியுடன் வாழ்ந்து வருவது அவருக்கு தெரிய வந்திருக்கிறது.  இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரஞ்சிதா கதறி அழுத்திருக்கிறார். 

 கணவர் தன்னை ஏமாற்றிவிட்டதை எண்ணி மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் .  கணவரிடம் இது குறித்து விசாரித்த போது தான் கிட்னி விற்ற படத்தில் அவர் இரண்டாவது திருமணம் செய்தது தெரிய வந்திருக்கிறது.   இதனால் மேலும் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார் ரஞ்சிதா .  இதை அடுத்து கடந்த மாதம் 24 ஆம் தேதி பல்கான் கிரி காவல் நிலையத்திற்கு சென்று கணவனின் மீது மோசடி புகார் கொடுத்திருக்கிறார்.

 சிறுநீரகத்தை விற்ற கையோடு அந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஆந்திராவுக்கு சென்று அங்கே வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அங்கிருந்து பெங்களூர் சென்று அந்த பெண்ணுடன் வசித்து வருவதாகவும் புகாரில் ரஞ்சிதா சொல்லி இருக்கிறார்.

 புகாரின் பேரில்  போலீசார் தனிப்படை அமைத்து பெங்களூர் சென்று பிரசாந்தை கைது செய்துள்ளனர்.