மாவு அரைக்க சென்ற சிறுமி ஆட்டோவிவில் கடத்தி பாலியல் வன்கொடுமை

 
r

மாவு அரைக்க சென்ற 13 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது உதகை மாவட்ட மகளிர் நீதிமன்றம்.

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் அடுத்த கொலப்பள்ளி .இந்த பகுதியைச் சேர்ந்தவர் ஞானரத்தினம் அவரின் மகன் கிருஷ்ணசாமி.  கூலித்தொழிலாளியான கிருஷ்ணசாமி கடந்த 2017 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

pp

 மாவு அரைப்பதற்காக கொளப்பள்ளி சுடுகாடு பக்கம் நடந்து சென்ற போது அந்த சிறுமியை ஆட்டோவில் கடத்தி சென்று இருக்கிறார் கிருஷ்ணசாமி . அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  பின்னர் இந்த சம்பவம் குறித்து தேவாலா அனைத்து மகளிர் போலீஸில் கிருஷ்ணசாமி மீது கடத்தல் வழக்கு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர் .  இந்த வழக்கு உதகையில் இருக்கும் மாவட்ட முதன்மை மகளிர் நீதிமன்றத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்து வந்துள்ளது.

 வழக்கு விசாரணை தற்போது முடிவடைந்திருக்கும் நிலையில் நீதிபதி நாராயணன் குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணசாமி மேல் சிறுமியை கடத்திச் சென்றதற்காக ஐந்து ஆண்டுகளும் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 20 ஆண்டுகள் என்றும் மொத்தம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.   இந்த வழக்கில் ஜாமீனில் வெளியில் இருந்த கிருஷ்ணசாமி மீண்டும் சிறிய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.