நிர்வாண வீடியோவை காட்டி தொழிலதிபரிடம் 3 கோடி ரூபாயை கறந்த கும்பல்

 
n

ராங் கால் மூலம் பேசிய பெண்ணின் வற்புறுத்தலால் வீடியோ காலில் நிர்வாணமாக பேசிய தொழிலதிபரிடம் இருந்து பல கோடி ரூபாய் கறந்திருக்கிறது மோசடி கும்பல்.  குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 68 வயதான அந்த தொழிலதிபர் அந்த மோசடி கும்பலிடம் சிக்கி பெரும்பாடு பட்டிருக்கிறா.  ர் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் போலீசை நாடி இருக்கிறார்.

 கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி அன்று ரியா சர்மா என்கிற பெண்ணிடம் இருந்து மெசேஜ் வந்திருக்கிறது.   சில நொடிகளில் வீடியோ கால் செய்து அந்த பெண் பேசி இருக்கிறார்.  அப்போது வீடியோ காலிலேயே உறவு வைத்துக் கொள்ளலாம் என்று வற்புறுத்தி இருக்கிறார்.   முதலில் மறுத்த போது இதனால் எந்த பிரச்சனையும் வராது என்று சொல்லி சமாதானம் செய்து விடிய காலில் பேசியிருக்கிறார்.

l

 அந்த பெண்  சொன்னபடியே அந்த தொழிலதிபரும் நிர்வாணமாக பேசியிருக்கிறார்.  கொஞ்ச நேரத்துக்கு பின்னர் அந்த வீடியோ காலில் நிர்வாணமாக இருந்த வீடியோவை அனுப்பி 50 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டி இருக்கிறார் அந்த பெண். இதனால் அவர் கேட்டபடியே பணத்தை அனுப்பி வைத்திருக்கிறார். 

 கொஞ்ச நாட்கள் கழித்து டெல்லி இன்ஸ்பெக்டர் பேசுறேன் என்று சொல்லி அந்த வீடியோவை  காட்டி மிரட்டி ஒரு நபர் 3 லட்சம் ரூபாய் கேட்டிருக்கிறார்.  அதன் பின்னர் டெல்லி சைபர் கிரைமில்  இருந்து பேசுகிறேன் உன் மேல் வழக்கு போட கூடாது என்றால் 80 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பு என்று கேட்டிருக்கிறார்.  அதன் பின்னர் உன்னிடம் வீடியோ காலில் பேசிய அந்த ரியா சர்மா தற்கொலை முயற்சி பண்ணி இருக்கிறார்.   இந்த விவகாரத்தில் சட்டப்படி பிரச்சனை எதுவும் இல்லாமல் வழக்கை முடிக்க வேண்டும் என்றால் 30 லட்சம் ரூபாய் அனுப்பு என்று சிபிஐ ஆபிஸர் போல் ஒருத்தர் பேசி இருக்கிறார்.

 இப்படி இரண்டு கோடியே 70 லட்சம் ரூபாய் வரை பணத்தை இழந்து இருக்கிறார் அந்த தொழிலதிபர்.   இதன் பின்னர் வீடியோ சம்பந்தப்பட்ட வழக்கு முடிக்கப்பட்டதாக சொல்லி நீதிமன்ற உத்தரவுக்கான நகலையும் அந்த தொழிலதிபருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.   அதில் இருந்த முத்திரையை பார்த்த பிறகு தான் மோசடி கும்பலின் வேலை என்று தெரிய வந்திருக்கிறது. 

 11 பேர் தன்னை தொடர்பு கொண்டு டிசம்பர் 27ஆம் தேதி வரைக்கும் 2.70 கோடி ரூபாயை மிரட்டி பறித்து இருக்கிறார்கள் என்று சைபர் கிரைம் போலீசில் புகார் கூறியிருக்கிறார் அந்த தொழிலதிபர்.   மிரட்டி பணம் பறித்தல்,  ஆள்மாறாட்டம்,  மோசடி செய்தல் என்று பல்வேறு பிரிவுகளில் அந்த 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது சைபர் கிரைம்.