மனைவியின் ஆதரவுடன் மகளுக்கு 8 வருடங்கள் பாலியல் தொல்லை தந்த தந்தை

 
gg

 பெற்ற தந்தையே மகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார்.  12 வயது சிறுமியாக இருந்தது முதல் தற்போது 20 வயது இளம் பெண்ணாக இருக்கும் வரைக்கும் தொடர்ந்து எட்டு வருடங்களாக பாலியல் தொல்லை கொடுத்து அவர் வந்திருக்கிறார்.   தாயிடமும் பெரியப்பாவிடமும் இதைப் பற்றி முறையிட்டு அழும்போதெல்லாம் அவர்கள் அதட்டி உருட்டி மிரட்டி வந்திருக்கிறார்கள்.   பெற்ற தாயே இதற்கு ஆதரவாக இருப்பதை நினைத்து அந்த சிறுமி மன உளைச்சலில் இருந்து வந்திருக்கிறார்.  சென்னையில் நடந்திருக்கிறது இந்த அவலம்.

 சென்னையில் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த 59 வயது முதியவர்,  தனது 20 வயதான மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.  இந்த தந்தை தன் மகள் 12 வயது சிறுமியாக இருந்தது முதல் பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார் .  எட்டு வருடங்களாக தந்தையிடம் இந்த சித்திரவதையை அனுபவித்து வந்திருக்கிறார்.

re

 இதைப்பற்றி தன் தாயிடமும் பெரியப்பாவிடமும் சொல்லி அழும்போது எல்லாம் அவர்கள் அதட்டி உருட்டி மிரட்டி இருக்கிறார்கள்.   இதனால் சிறுமி யாரிடமும் வெளியே சொல்ல முடியாமல் பெற்ற தாயே தனக்கு இப்படி துரோகம் செய்கிறார் என்ற மன உளைச்சலில் இருந்து வந்திருக்கிறார்.

 இந்த நிலையில் தற்போது 20 வயது இளம்பெண் ஆனதை அடுத்து இந்த சிறுமிக்கு கொஞ்சம் தைரியம் வந்திருக்கிறது.   கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி அன்று செம்பியம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார்.    போலீசார் அந்த இளம் பெண்ணின் தாய் , தந்தை இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
 
பெற்ற தந்தையே தன் மகளை சிறுமியாக இருந்தது முதல் இளம் பெண்ணாக இருக்கும் வரைக்கும் 8 ஆண்டுகள் தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வ வந்திருக்கிறார்.    இதற்கு தாயும் பெரியப்பாவும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்ற செய்தி கொளத்தூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.