பெற்ற தாயை உயிருடன் புதைத்த கொடூர மகன்

 
pp

 பெற்ற தாயை உயிருடன் புதைத்து கொண்டிருக்கிறார் கொடூர மகன்.   மது அருந்து பணம் கொடுக்கவில்லை என்பதற்கு இந்த கொடூர செயலை செய்திருக்கிறார்.

o

விழுப்புரம் மாவட்டத்தில் வி.சித்தாமூர் கிராமத்தில் பிறந்தவர் சக்திவேல்(47).   பிளாஸ்டிக் குப்பைகள் வேலை செய்து வரும் இந்த வாலிபருக்கு திருமணமாகி ஒரு மகனும் மூன்று மகள்களும் உள்ளனர்.  

 நேற்று இரவு சக்திவேல் மது அருந்துவதற்காக தாய் யசோதையிடம்(75) பணம் கேட்டிருக்கிறார்.  அதற்கு அவர் இல்லை என்று சொல்லி இருக்கிறார்.  அப்படி இல்லை என்றால் காதில் போட்டு இருக்கும் நகையை கழட்டி கொடு என்று கேட்டிருக்கிறார்.   தாய் மறுத்திருக்கிறார்.  இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல்  தாயிடம் சண்டை போட்டு சத்தம் போட்டுவிட்டு வெளியே சென்று இருக்கிறார்.

rr

 வெளியே சென்ற சக்திவேல் மது போதையில் இரவு 11 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்திருக்கிறார் . மீண்டும் ஏன் பணம் கொடுக்கவில்லை, நகை கொடுக்கவில்லை என்று கேட்டு தாயிடம்  சண்டை போட்டு இருக்கிறார்.   அப்போது ஆத்திரத்தில் தாயை ஆவேசமாக தாக்கி இருக்கிறார்.  இதில் அந்த யசோதை மயங்கி  கீழே விழுந்திருக்கிறார்.

 தாய் இறந்து விட்டார் என்று நினைத்து  வீட்டின் பின்புறத்திலேயே பள்ளம் தோண்டி தாய் யசோதையை உயிருடன் புதைத்திருக்கிறார். 

 தகவல் அறிந்த அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளர் சித்ரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மது போதையில் இருந்த சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ya

யசோதை புதைக்கப்பட்ட இடத்தில் உடலை தோண்டி  எடுத்து உள்ளனர் .  உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.   சம்பவம் குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.