சாலையில் சென்ற கல்லூரி மாணவியை வாழைத்தோப்புக்குள் இழுத்துச்சென்று..காமக்கொடூரன் சிறையிலடைப்பு

 
வெ

பேருந்து நிலையத்தில் இறங்கி வீட்டிற்கு நடந்த சென்ற அந்த கல்லூரி மாணவியை தரதரவென்று காட்டுப்பகுதிக்கு  இழுத்துச் சென்று வாயில் துணியை வைத்து அடைத்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் பேக்கரி மாஸ்டர்.  அங்கிருந்து தப்பி வந்த அந்த சிறுமி அளித்த புகாரின் பேரில் பேக்கரி மாஸ்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  அந்த பேக்கரி மாஸ்டருக்கு கடந்த வாரம் தான் பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

 வேலூர் மாவட்டத்தில்  ஒடுகத்தூர் அடுத்த கத்தாரி குப்பம்.  இப்பகுதியைச் சேர்ந்தவர் சரத்குமார்(25).  இந்த வாலிபர் அணைக்கட்டு பகுதியில் தனியார் பேக்கரி கடையில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.  திருமணமான இவருக்கு கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. 

ச

 இந்த நிலையில் குடியாத்தம் அரசு கல்லூரியில் பி. ஏ. தமிழ் படித்து வரும் 17 வயது சிறுமி வார விடுமுறை நாட்களில் ஒடுகத்தூர் பகுதியில் இருக்கும் தனியார் துணிக்கடையில் வேலை செய்து வந்திருக்கிறார்.  வேலை செய்துவிட்டு இரவு கத்தாரி குப்பம் பகுதிக்கு பேருந்தில் வந்து இறங்கியவரை  தந்தை வந்து அழைத்துச் செல்வது வழக்கம் . அப்படித்தான் நேற்று இரவு கத்தாரிகுப்பம் பகுதிக்கு வேலைக்கு சென்று விட்டு இரவு எட்டு முப்பது மணி அளவில் வீட்டிற்கு செல்வதற்காக கத்தாரி குப்பம் பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கிறார்.

 அவர் தந்தை அங்கு அந்த நேரம் வராததால் நடந்தே செல்லலாம் என்று நடந்து சென்றிருக்கிறார்.   வாழைத்தோட்டம் வழியாக நடந்து சென்ற போது வாலிபர் சரத்குமார் அந்த சிறுமியை வழிமறித்து இருக்கிறார்.   தன்னுடன் பைக்கில் வருமாறு  சொல்லி இருக்கிறார்.   அதற்கு சிறுமி மறுத்து செல்லவும் துரத்திக் கொண்டு கையைப் பிடித்து இழுத்திருக்கிறார் .  அதில் சிறுமி சத்தம் போட்டு இருக்கிறார்.

 அப்போது அந்த வழியாக வந்த இரண்டு பேர் சிறுமியை விடச் சொல்லி இருக்கிறார்கள்.  அந்த இரண்டு பேரையும் மிரட்டி இருக்கிறார் வாலிபர். இதில் அவர்கள் அதற்கு மேல் பேசாமல் அங்கிருந்து கிளம்பி இருக்கிறார்கள்.  உடனே அந்த சிறுமியை தரதரவென்று இழுத்துக் கொண்டு வாழைத்தோட்டத்திற்குள் சென்று இருக்கிறார். சிறுமி தன்னை காப்பாற்ற சொல்லி சத்தம் போட்டு இருக்கிறார்.  உடனே அந்த சிறுமியின் வாயில் துணியை வைத்து அடைத்து இருக்கிறான் சரத்குமார். 

 ஒரு மணி நேரத்திற்கு மேலாக மீண்டும் மீண்டும் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் இதை யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டி விட்டு சென்றிருக்கிறார் .  அங்கிருந்து அழுது கொண்டே வீட்டிற்கு சென்ற சிறுமி பெற்றோரிடம் நடந்ததைச் சொல்லி இருக்கிறார் . இதைக் கேட்டு அதிர்ச்சியான பெற்றோர்கள்  வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் இரவு 12 மணிக்கு புகார் அளித்திருக்கிறார்கள்.  புகாரின் அடிப்படையில் சரத்குமாரை கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.