நடுரோட்டில் கல்லூரி மாணவி சரமாரியாக வெட்டி படுகொலை

 
சொ

கல்லூரி மாணவி நடுரோட்டில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.   கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் நடந்துள்ளது இந்த சம்பவம் .

கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் சண்போகநஹள்ளி என்கிற பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண் ராஷி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.   இவர் வழக்கம் போல் கல்லூரி சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிக் கொண்டு இருந்திருக்கிறார்.  

ர்

 அப்போது பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் நடு ரோட்டில்  அந்த மாணவியை வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி இருக்கிறார்கள்.  இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார் அந்த மாணவி .

அப்பகுதியில் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க,  சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.  காதல் விவகாரத்தால் இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.   படுகொலை சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகளை கண்டுபிடிக்க தீவிரம் காட்டியிருக்கின்றனர் போலீசார்.