காதலி வராததால் அவரது மகனை குளத்தில் மூழ்கடித்து கொன்ற கள்ளக்காதலன்

 
m

கள்ளக்காதலி தன்னுடன் பழகுவதை திடீரென்று நிறுத்தி விட்டதால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் பெண்ணின் ஏழு வயது மகனை நீச்சல் குளத்தில் மூழ்க வைத்து கொடூரமாக கொலை செய்திருக்கிறார்.

 மும்பையில் தானே மாவட்டத்தில் கல்யானை பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று பின்னர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் தங்கள் மகனை பல இடங்களில் தேடிப் பார்த்து இருக்கிறார்கள்.  எங்கும் கிடைக்காததால் தங்கள் மகனை யாரோ கடத்திவிட்டார்கள் என்று கடக்பாடா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

b

 புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தேடி வந்தார்கள்.  போலீசார் தேடி வந்த நிலையில் சிறுவனின் வீட்டின் அருகே உள்ள நீச்சல் குளத்தில் அந்த சிறுவன் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்திருக்கிறது. அங்கு விரைந்து சென்ற போலீசார் சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.  

அந்த சிறுவனை பள்ளியில் இருந்து அங்கு காவலாளியாக வேலை பார்த்து வந்து நிதின் கம்ப்ளே என்பவர் தான் அழைத்து வருவது வழக்கம்.  சம்பவத்தன்று அவர் சிறுவனை அழைத்து வந்த போது நீச்சல் குளத்தில் அச்சிறுவனை மூழ்க வைத்து மூச்சுத் திணறடித்து  கொலை செய்திருக்கிறார்.   போலீஸ் விசாரணையில் தகவல் தெரிய வந்ததும் அந்த காவலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.   

அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுவனின் தாய்க்கும் காவலாளி நிதின் காம்ப்ளேவுக்கும் கள்ள உறவு இருந்து வந்தது.    அவர்களுக்கு ஏற்பட்ட தகராறினால் கள்ள உறவை சிறுவனின் தாய் துண்டித்திருக்கிறார்.   நிதின் அழைத்தபோதும் அப்பெண் வர மறுத்துவிட்டதால்,  கடும் ஆத்திரத்தில் இருந்த நிதின் காம்ப்ளே கள்ளக்காதலியை பழி வாங்க வேண்டும் என்று நினைத்து அவரின் 7 வயது மகனை நீச்சல் குளத்தில் மூழ்கடித்து கொலை செய்தது தெரிய வந்திருக்கிறது.