மாணவி குளிக்கும்போது ஜன்னல் வழியாக ரகசியமாக வீடியோ எடுத்த கேண்டீன் ஊழியர்

 
l

ஐஐடி மாணவி விடுதி அறையில் குளித்துக் கொண்டிருந்த போது ஜன்னல் வழியாக கேண்டீன் ஊழியர் ரகசியமாக வீடியோ எடுத்திருக்கிறார்.  இதை அடுத்து அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்த ஊழியரை கைது செய்துள்ளனர்.

 மும்பையில்  ஐஐடியில் படித்து வரும் அந்த மாணவி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் விடுதி குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்திருக்கிறார்.  அப்போது விடுதியின் கேண்டீன் ஊழியர் ஒருவர் ஜன்னல்  வழியாக அந்த மாணவி குளித்ததை ரகசியமாக வீடியோ எடுத்திருக்கிறார்.  இதை அந்த மாணவி கவனித்துள்ளார்.

 அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி போலீசில் புகார் அளிக்கவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்காக கேண்டீன் ஊழியரை அழைத்து விசாரணை நடத்திய பின்னர் கைது செய்துள்ளனர்.

ll

 குளியலறையில் ஜன்னல்  ஓட்டைகள் வழியாக யாரோ தன்னை கவனிப்பதை உணர்ந்து மாணவி சத்தம் போட்டு இருக்கிறார்.  இந்த சத்தத்தைக் கேட்டு அந்த ஊழியர் தப்பி ஓடி இருக்கிறார் . அப்போது அந்த மாணவி விடுதி அதிகாரிகளுக்கு சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.

இதை அடுத்து மும்பை ஐஐடி அதிகாரிகள் கேண்டீன் ஊழியர்களின் செல்போனை சோதனை செய்துள்ளனர்.  அதன் பின்னர் பேராசிரியர் தபே நந்து இது குறித்து தெரிவித்துள்ள விளக்கத்தில்,   ஐஐடி நிர்வாகத்தால் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.  வெளியில் இருந்து குளியல் அறைக்கு சீல் வைக்கப்பட்டு இருக்கிறது. விடுதி -10 ஆய்வுக்கு பின்னர் தேவையான சிசிடிவி கேமராக்கள், விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன .

இதுவரைக்கும் இரவில்  கேண்டீனை ஆண் பணியாளர்கள் நடத்தி வந்தனர்.   தற்போது விடுதி -10 பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் கேண்டீன் தற்காலிகமாக மூடப்பட்டு பெண் ஊழியர்களை மட்டுமே பணியில் அமர்த்த முடிவு செய்து இருக்கிறோம் என்கிறார்.