நண்பருடன் சேர்ந்து மனைவியை பாலியல் வன்கொடுமை செய்து வந்த சென்னை தொழிலதிபர்

 
r

 நண்பருடன் சேர்ந்து மனைவியை இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த சென்னை தொழிலதிபரை கேரள போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்.

 கேரள மாநிலத்தில் திருச்சூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவில் 35 வயது மதிக்கத்தக்க படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.   இது குறித்து போலீசாருக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது .

j

மருத்துவமனைக்குச் சென்ற போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தியதில்,  கணவர் தன்னை கடுமையாக தாக்கியதாகவும் நண்பருடன் சேர்ந்து  பாலியல் வன்கொடுமை செய்து வந்ததையும் சொல்லி அழுது இருக்கிறார்.   சென்னையைச் சேர்ந்த இந்த தொழிலதிபர் அவரது மனைவியை கடுமையாக தாக்கி கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

கணவரின் நண்பரும் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார்.   கணவருக்கும் அவரது நண்பருக்கும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் அந்த பெண் மீது கொலை முயற்சியும் நடந்து இருக்கிறது.  

அப்பெண்ணிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் அப்பெண்ணின் கணவரையும் அவரது நண்பரையும் திருச்சூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்திருக்கிறார்கள்.