உணவு, தண்ணீர் கொடுக்காமல் 5 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்

 
h

 பெண்ணை கொடூரமாக தாக்கி அறையில் அடைத்து வைத்து உணவு, தண்ணீர் கொடுக்காமல் ஐந்து நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்த  கொடூரன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  அமெரிக்காவில் நடந்துள்ளது இந்த சம்பவம் . டேட்டிங் செயலி மூலம் பழகி வந்த பெண்ணைத்தான் இப்படி சித்திரவதை செய்திருக்கிறார் அந்த கொடூரன்.

வெளிநாடுகளில் டேட்டிங் செயலி மிகப் பிரபலமாக உள்ளது.   திருமணத்திற்கு முன்பு ஆண், பெண் இருவரும் ஒன்றாக பழகுவது பாலியல் உறவு போன்ற விஷயங்களில் ஈடுபடுவது போன்ற செயல்கள் டேட்டிங்.  இந்த டேட்டிங்கிற்கு என்று தனியாக செயலிகளும் இயங்கி வருகின்றன.   அப்படித்தான் அமெரிக்காவில் பம்பில் என்கிற  டேட்டிங் செயலி மூலம்   டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வரும் ஜக்காரி மில்ஸ் என்கிற 21 வயது இளைஞனுக்கு பெண் ஒருவர் சாட்டிங் மூலம் பழகி வந்திருக்கிறார்.

g

 பின்னர் இருவரும் நன்றாக பேசிப் பழகிய பின்னர் அந்த பெண்ணை தனது  வீட்டிற்கு அழைத்து இருக்கிறார்.   விடுமுறை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வீட்டில் தனியாக இருந்த போது அந்த பெண்ணிடம் பேசிக் கொண்டே இருந்தவர் திடீரென்று அத்துமீறி பாலியல் உறவில் ஈடுபட முயன்றிருக்கிறார்.  அதற்கு அந்த பெண் சம்மதிக்காமல் இருந்திருக்கிறார். 

 இதனால் ஆத்திரமடைந்த ஜக்காரி,  பெண்ணின் முகத்தில் கடுமையாக தாக்கி இருக்கிறார்.  இதில் அந்த பெண் நிலை குலைந்து போய் இருக்கிறார்.  அப்போது ஜக்காரி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு இருக்கிறா.    முகம், கழுத்து பகுதியில் அந்த பெண்ணை கடித்து வைத்திருக்கிறார்.   பின்னர் ஸ்க்ரூ டிரைவர் ஒன்றின் பின்பகுதியில் அந்த பெண்ணை அடித்திருக்கிறார். 

 இதில் பெண் பலத்த காயமடைந்து இருக்கிறார்.  பின்னர் 5 நாட்கள் அந்த பெண்ணை உணவு,  தண்ணீர் எதுவும் கொடுக்காமல் ஒரு அறையில் அடைத்து வைத்திருந்திருக்கிறார்.   அந்த நிலையிலும் பெண்ணை  தினமும் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.  ஒரு நாள் ஜக்காரி இல்லாத பொழுது அந்த பெண் அங்கிருந்து தப்பித்து வெளியே வந்து சாலையில் ஓடி இருக்கிறார் .  அப்பகுதியில் வந்தவரிடம் தனக்கு ஏற்பட்ட நிலைமை சொல்லி அழுது இருக்கிறார்.  அதன் பின்னர பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜக்காரியை கைது செய்துள்ளனர்.  பின்னர் 41 லட்சம் ரூபாய் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.  வீட்டுக்காவலில் இருக்கும் அவர் விசாரணைக்கு  அழைக்கும் போது நீதிமன்றத்திற்கு வர வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.