தனியாக இருந்த தம்பி மனைவி கொலை - அண்ணன் சிறையிலடைப்பு

 
t

தனியாக வசித்து வந்த தம்பி மனைவியை படுகொலை செய்த அண்ணன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.    சொத்துக்காக இந்த படுகொலை நிகழ்ந்திருக்கிறது புளியங்குடி பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.  

 தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி அடுத்த அய்யாபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ்.   இவரின் முதல் மனைவி இறந்து விட்டதால் இரண்டாவதாக தங்கம்(55) என்பவரை திருமணம் செய்திருக்கிறார்.   இவருக்கு ஒரு மகள் உள்ளார்.   தங்கத்தின் மகள் வெளியூரில் தங்கி படுத்த வருகிறார் .  கணவர் நாகராஜன் கோவையில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்.    அவ்வப்போது மட்டும் ஊருக்கு வந்து சென்றிருக்கிறார் நாகராஜ்.

rr

 தங்கம் மட்டும் அய்யாபுரத்தில் தனியே வசித்து வந்துள்ளார்.    இந்த நிலையில் தங்கம் நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்திருக்கிறார்.  இதை பார்த்து அக்கம் பக்கத்தில் புளியங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.   போலீசார் வந்து தங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.  

 அதன் பின்னர் தங்கத்தின் கொலைக்கான காரணம் குறித்து புளியங்குடி போலீசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.    தங்கத்தின் கணவர் நாகராஜ் அண்ணன் தங்கையா என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்திருக்கிறது.    நீண்ட காலம் தங்கத்திற்கும் தங்கையாவிற்கும் சொத்து பிரச்சனை இருந்து  வந்தது தெரிய வந்தது போலீசாருக்கு இந்த சந்தேகம் இருந்தது.  

 இதை அடுத்து தங்கையாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்திருக்கிறார்.   பின்னர் போலீசார் நடத்திய கிடக்கிப்பிடி விசாரணையில் தம்பியின் மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார்.   சொத்து பிரச்சனையால் இந்த கொலையை செய்ததாக அவர் சொல்லியிருக்கிறார்.   இதை அடுத்து  அவரை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.