லிப்டில் 62 வயது முதியவரால் 9வயது சிறுமிக்கு நடந்த கொடுமை

 
l

பதினோராவது மாடியில் இருக்கும் தனது வீட்டிற்கு லிப்டில் வழக்கம் போல் சென்ற அந்த 9 வயது சிறுமிக்கு அன்று 62 வயது முதியவரால் அந்த கொடுமை நிகழ்ந்திருக்கிறது.

li

 குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் பகுதியில் இருக்கும் சந்த் கேடா குடியிருப்பு.  இந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில்  பதினோராவது மாடியில் பெற்றோருடன் வசித்து வருகிறார் 9 வயது சிறுமி.   அவர் வெளியே சென்று விட்டு 11-வது மாடியில் இருக்கும் தனது வீட்டிற்கு லிப்டில் சென்று இருக்கிறார்.   அந்த லிப்டில் முன்னதாகவே  பானு பிரதாப் ராணா என்ற 62 வயது முதியவர் இருந்திருக்கிறார்.  அவர் ஜகத்பூரைச் சேர்ந்தவர்.

லிப்டில் சிறுமி ஏறியதுமே முதியவர் அந்த சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு இருக்கிறார்.  லிப்ட் மேலே சென்றபோது சிறுமியால் அந்த முதியோரிடம் எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை.   லிப்ட் 11-வது மாடிக்கு சென்றதும் அழுது கொண்டே அங்கிருந்து பெற்றோரிடம் ஓடி இருக்கிறார்.   மகள் அழுது கொண்டே ஓடி வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்,  என்ன நடந்தது என்று கேட்க , லிப்டில் தனக்கு நடந்த கொடுமையை சொல்லி அழுது இருக்கிறார் .

ft

உடனே பெற்றோர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய போது மகள் சொன்னது உண்மை என்று தெரிய வந்திருக்கிறது.   இதை அடுத்து போலீஸிடம் புகார் அளிக்க போலீசார் அந்த முதியவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.