16 வயது மாணவியை வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்று.. முதியவர் சிறையில் அடைப்பு

 
x

16 வயது மாணவியை மிரட்டி வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததில் அந்த 11ஆம் வகுப்பு மாணவி தற்போது மூன்று மாத கர்ப்பமாக இருக்கிறார்.   இதை அடுத்து 63 வயது முதியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  

 திருவள்ளுவர் அடுத்த குக்கிராமத்தில் வசித்து வரும் அந்த 16 வயது மாணவி அதே பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.  இந்த மாணவி மூணு மாத கர்ப்பமாக இருக்கிறார்.   இதை அடுத்து மாணவியின் பெற்றோர் திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கர்ப்பத்தை கலைக்க முயன்று இருக்கிறார்கள்.

t

 அப்போது  மருத்துவமனை தரப்பில் இருந்து ஆவடி மகளிர் காவல் ஆய்வாளருக்கு தகவல் சென்றிருக்கிறது.   உடனே விரைந்து வந்த ஆவடி மகளிர் காவல் ஆய்வாளர் ராதா,  அந்த குடும்பத்தினரிடம் விசாரணை செய்ததில் மாணவியை மிரட்டி முதியவர் பலராமன்(வயது 63) வன்கொடுமை செய்துவிட்டார் . அவர் கூலி வேலை செய்து வருகிறார்.  அவருக்கு  இரண்டு மனைவிகள்.  இரண்டு மகள்கள் உள்ளனர்.

 கடந்த மூன்று மாதத்திற்கு முன்னாள்  மாணவியை வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.   இதை அடுத்து முதியவர் பலராமனை கைது செய்த போலீசார் திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.  நீதிபதியின் உத்தரவுக்கு பின்னர் அவரை புழல்  மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.