14 வயது சிறுமிக்கு 70 வயது முதியவரால் நேர்ந்த கதி

 
p

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 70  வயது முதியவருக்கு 29 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்து இருக்கிறது செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம்.

 செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்யூர் தாலுகாவில்  போந்தூர் கிராமம்.     அக்கிராமத்தில் இருந்த 14 வயது மன வளர்ச்சி குன்றிய சிறுமியை 70 வயது ராஜமாணிக்கம் என்ற முதியவர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.  கடந்த 2015 ஆம் ஆண்டில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

g

இதை தெரிந்து கொண்ட சிறுமியின் தாய்,  மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராஜமாணிக்கம் மீது புகார் அளித்திருக்கிறார்.   மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ராஜமாணிக்கம் கைது செய்யப்பட்டார்.

 செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்தது.   வழக்கின் விசாரணை முடிந்து தற்போது குற்றச்சாட்டு குற்றவாளி மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டிருப்பதால் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது . முதியவருக்கு 29 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

 தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம்  வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.