நடனமாட மறுத்ததால் 10 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர்கள்

 
f

 நடனமாட மறுத்த 10 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார்கள் இரண்டு இளைஞர்கள்.   பீகார் மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த கொடூர சம்பவம். 

 பீகார் மாநிலத்தில் ஹாஜிபூர் என்கிற பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்திருக்கிறது.   பிரம்மாண்டமாக நடந்த அந்த திருமணத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.   புதன்கிழமை இரவில் திருமண விழாவில் பலரும் நடனமாடி இருக்கிறார்கள்.   மண்டபத்தின் ஒரு பகுதியில் சிறுவர்களுடன் இரண்டு இளைஞர்கள் நடனம் ஆடிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

 அப்போது அங்கு இருந்த ஒரு சிறுமியை நடனம் ஆட வா என்று இரண்டு இளைஞர்களும் அழைத்து இருக்கிறார்கள்.   அந்த சிறுமி அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.  பலமுறை வற்புறுத்தி கூப்பிட்டும் அந்த சிறுமி நடனமாட வர முடியாது என்று சொல்லி இருக்கிறார்.  இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இரண்டு இளைஞர்கள் சிறுமியை பழிவாங்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

fi

அதே இரவில் 7 மணி அளவில் சிறுமி இயற்கை உபாதை கழிப்பதற்காக மண்டபத்தின் பின்பக்கம் இருக்கும் கழிவறைக்கு சென்று இருக்கிறார்.  இதை நோட்டமிட்ட அந்த இளைஞர்கள் அங்கு சென்று அந்த சிறுமியை அருகில் இருக்கும் வயல்வெளிக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள்.   பின்னர் அந்த சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார்கள்.

 உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததில் அலறி துடித்திருக்கிறார் சிறுமி.  அலறல் சத்தம் கேட்டு அபக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.   மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அந்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   போலீசார் மருத்துவமனைக்கு சென்று சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றிருக்கிறார்கள்.  

 போலீசாரின் விசாரனையில் 18 வயதான பிரசாந்த் குமார் என்ற இளைஞரும்,  20 வயதான  பிரதீப் குமார் என்ற இளைஞரும் தான் இந்த ம் சம்பவத்தை செய்தது தெரிய வந்திருக்கிறது.   சம்பவத்திற்கு பின்னர் அந்த இரண்டு இளைஞர்களும் தலைமறைவாக இருக்கிறார்கள் என்பதும் தெரியவந்ததை அடுத்து அவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்திருக்கிறார்கள்.