25 இளைஞர்கள் சேர்ந்து 10 வயது சிறுமியை அடித்துக் கொன்ற கொடூரம்

 
c

 25 இளைஞர்கள் சேர்ந்து கொண்டு கொடூரமாக தாக்கியதில் 10 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனூர் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் ஆறு பேர் அங்கிருக்கும் கோவிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள்.   அதன்பின்னர் அவர்கள் ஆட்டோவில் புறப்பட்டு  சென்றிருக்கிறார்கள். 

அவர்கள்  கோவிலில் இருந்த பித்தளை பொருட்களை திருடிக் கொண்டு ஆட்டோவில் செல்வதாக அந்தப் பகுதி இளைஞர்களுக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ளார்கள். உடனே 25 இளைஞர்களும் அந்த ஆட்டோவை விரட்டிச் சென்று இருக்கிறார்கள். 

cc

 ஒரு இடத்தில் ஆட்டோ மடக்கிப் பிடித்தவர்கள் ஆட்டோவில் இருந்தவர்களை கடுமையாக தாக்கி இருக்கிறார்கள்.   அந்த ஆட்டோவுக்குள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் இருந்திருக்கிறார்கள்.   அந்த ஆறு பேரில் 10 வயது சிறுமியையும் கொடூரமாக தாக்கி இருக்கிறார்கள்.   இதில் அந்த சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. 

 இதற்குள் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமி உட்பட அந்த குடும்பத்தினரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.   சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 விசாரணையில்,  நாராயணசாமி என்பவர் மீது கொலை மற்றும் திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்திருக்கிறது .  இந்நிலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.  சிறுமி உயிர் இழந்ததை அடுத்து 25 இளைஞர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர் போலீசார்.  இந்த விவரம் தெரியவந்ததும் 25 இளைஞர்களும் தலைமறைவாகிவிட்டார்கள்.  போலீசார் அவர்களை பிடிக்க தேடி வருகின்றனர்.