9ம் வகுப்பு பாலியல் வன்கொடுமை - இளைஞருக்கு ஆயுள்

ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது அரியலூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் .
அரியலூர் மாவட்டத்தில் உஞ்சினி கிராமம் . இக்கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்ற 22 வயது இளைஞர் உறவினர் வீட்டில் தங்கி வளர்ந்து வந்திருக்கிறார். அந்த நாகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியை துரத்தி துரத்தி காதலித்து வந்திருக்கிறார். ஆனால் அந்த மாணவி கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் காதலிக்க மறுத்து வந்திருக்கிறார்.
இதனால் ஒரு அதிரடி முடிவு எடுத்திருக்கிறார். நீ என்னை காதலிக்கவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று மிரட்டி இருக்கிறார். இதனால் அச்சமடைந்த அந்த பெண் லட்சுமணனை காதலிப்பதாக சொல்லி இருக்கிறார். அதன் பின்னர் இருவரும் இரண்டு ஆண்டுகள் காதலித்து வந்துள்ளார்கள். இந்த விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் மாணவியை கடுமையாக கண்டித்து இருக்கிறார்கள்.
இதன் பின்னர் லட்சுமணனுடன் பேசுவதை தவிர்த்து வந்திருக்கிறார் அந்த மாணவி . இதில் ஆத்திரமடைந்த லட்சுமணன் ஒருநாள் ஆசை வார்த்தை சொல்லி அந்த மாணவியை தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கிறார். இனி பெற்றோரின் பேச்சைக் கேட்டு நம்மை காதலிக்க மாட்டார் என்பதை உணர்ந்த லட்சுமணன் அந்த மாணவியை எப்படியாவது பாலியல் பலாத்காரம் செய்திட வேண்டும் என்று திட்டமிட்டு தான் அழைத்துச் சென்றிருக்கிறார். அதன்படியே அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .
சம்பவம் குறித்து அந்த மாணவி பெற்றோரிடம் சொல்ல, பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள் . இது குறித்த வழக்கு அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்திருக்கிறது.
கடந்த 18/7/2022 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில் வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்து விசாரணைகள் முடிவடைந்ததை அடுத்து லட்சுமணன் குற்றவாளி என்று உறுதியானது. இதை அடுத்து லட்சுமணனுக்கு ஆயுள் தண்டனையும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் அவதாரமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்த மாணவியின் குடும்பத்திற்கு அரசு 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்திருக்கிறார்.