சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை ஓட்டலில் சிக்கிய 9 பெண்கள்

 
ho

சினிமாவில் நடிக்கும் ஆசையில் விபச்சார கும்பலிடம் சிக்கி சென்னை ஓட்டலில் அடைபட்டுக் கிடந்த 9 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.  அப்பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

 சென்னைக்கு வேலை தேடி வரும் பெண்களை சினிமா , தொலைக்காட்சிகளில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக சொல்லி ஏமாற்றி,  பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபட வைக்கும் கும்பல் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.   போலீசாரும் அவ்வப்போது கும்பலை பிடித்து சிறையில் அடைத்தாலும் மீண்டும் மீண்டும் வேறு வேறு கும்பல் உருவாக்கிக் கொண்டே இருக்கின்றார்கள். 

gi

 அந்த வகையில் தான் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தங்கும் விடுதி ஒன்றில் பாலியல் தொழில் நடத்தி வருகிறார்கள் என்று போலீசாருக்கு தகவல் வர போலீசார் அந்த தங்கும் விடுதியில் அதிரடி ரெய்டு  நடத்தி இருக்கிறார்கள்.   அந்த ரெய்டில் பாலியல் தொழில் நடத்தி வந்த பிரகாஷ் , ஏசு என்கிற இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். 

அந்த விடுதியில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 9 பெண்களை  பத்திரமாக மீட்டுள்ளனர் போலீசார் .  அவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னையில் வேலைக்கு தேடி  வந்ததையும்,  பிரகாஷ் மற்றும் இயேசு இருவரும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருகிறோம்,  தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருகிறோம் என்று சொன்னதை நம்பி அவர்கள் சொன்னதை எல்லாம் கேட்டு இப்படி எங்கள் வாழ்க்கையை சீரழிந்து விட்டது என்று கண்ணீருடன் கூறியிருக்கிறார்கள்.

 மீட்கப்பட்ட அந்த ஒன்பது பெண்களையும் போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.