ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சிறையிலடைப்பு! கூடப்பிறந்தவனை கொன்று தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்!

 
saa

சொத்துக்காக கூடப்பிறந்தவனையே கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடியதால் தம்பி, தங்கை என்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கணவாய் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சக்கிலியான் கொடை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்.  55 வயதான இந்த நபர் விவசாய தொழிலும் மாடுகளை வாங்கி விற்பனை செய்யும் தொழிலும் செய்து வந்திருக்கிறார்.  நேற்று முன் தினம் இவர் தோட்டத்தில் தூக்கில் சடலமாக தொங்கி இருக்கிறார்.  அவரின் உடலில் படுகாயங்கள் இருந்துள்ளன.

saan

சாணார்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கண்ணன் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி  வைத்துள்ளனர் .

இதன் பின்னர் கண்ணன் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.  கண்ணன் உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகத்தில் விசாரணை நடத்தியபோது,  உறவினர்களாலேயே கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விட்டு நாடகம் மாடி இருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.  இதன் பின்னர் போலீசார் உறவினர்களிடம் துருவித் துருவி விசாரணை நடத்தியதில் கண்ணனின் சகோதரி அழகி , அவரின் கணவர் சின்னகாளை, அவரின் மகன் அழகர்சாமி, கண்ணனின் தம்பி முருகன், அவரின் மனைவி வெள்ளையம்மாள், மகன்கள் சதீஷ்குமார் ,குணா, உறவினர்கள் வெள்ளைச்சாமி, நாச்சம்மாள் ஆகிய 9 பேருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருந்தது தெரிய வந்திருக்கிறது .

 போலீசார் 9 பேரிடமும் கொலை செய்ததற்கான காரணம் குறித்து கேட்டபோது,  2.5 ஏக்கர் சொத்துக்காக தகராறு ஏற்பட்டது.  இந்த தகராறியில் தான் கண்ணனை அனைவரும் சேர்ந்து அடித்து கொலை செய்து விட்டோம்.  பின்னர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்தது போல் செய்துவிட்டோம் என்று கூறி இருக்கிறார்கள்.  இதன் பின்னர் சாணார்பேட் போலீசார் 9 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.