8ஆம் வகுப்பு மாணவியை கழிவறையில் வைத்து பாலியல் வன்கொடுமை- 3 ஆசிரியர்கள் கைது

 
ச்

கிருஷ்ணகிரி அரசுப்பள்ளியில் 8ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவியை ஆசிரியர்கள் மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி கர்ப்பமாக இருப்பதாக கூறப்படும் நிலையில் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்தது. வயிறு வலி என மாணவி கூறியதும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
மாணவியை வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் போராட்டம் நடத்தினர். ஆசிரியர் தன் வாயை பொத்தி, கழிவறையில் வைத்து மூன்று ஆசிரியர்களும் பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ஆசிரியர்கள் மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.