8 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 75 வயது முதியவர்! வீடியோவை நண்பர்களுக்கு பகிர்ந்து குதூகலம்

 
rape

சோழவரம் அருகே 8 வயது சிறுமியை 3 மாதங்களுக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்த 75 வயது முதியவர் பாலு உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே 8வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 75 வயது முதியவர் 3 மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். சோழவரம் அருகே புதிய எருமைவெட்டிபாளையம் பகுதியில் தனியார் செங்கல் சூளையில் பெண் ஒருவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது தம்பியின் 8வயது மகள் தாய், தந்தை இல்லாததால் தனது அத்தையுடன் தங்கி அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வந்தார். கடந்த 24ஆம் தேதி இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்தார்.  இதனையடுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில் சிறுமியை முதியவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை அப்பகுதி இளைஞர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் உறவினர் அளித்த புகாரின் பேரில் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 75வயது முதியவர் பாலு என்பவர் சிறுமியை 3 மாதங்களுக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்ததும், அப்போது கண்ணன் என்பவர் மறைந்திருந்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் தமது நண்பர்களுக்கு பதிவிட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 75 வயது முதியவர் பாலு, சிறுமியின் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த சதீஷ், விஜயகுமார், ரமேஷ், பாஸ்கர், கண்ணன் என 6 பேரையும் போக்ஸோ சட்டம், ஐடி ஆக்ட் உள்ளிட்ட 6பிரிவுகளில் கைது செய்தனர். 3 மாதங்களுக்கு முன் சிறுமியை வன்கொடுமை செய்த முதியவரும் வீடியோவை பகிர்ந்த நபர்கள் என 6 பேரை அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.