குளித்தலை அருகே பயங்கரம்... மதுபோதையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கழுகூரில் மது போதையில் 7 வயது சிறுமையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து பிடித்து போலீசார் வசம் ஒப்படைத்தனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கழுகூர் ஊராட்சி மாகாளிப்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன் (23). இவர் இன்று கழுகூர் எஸ். வலையப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் மது குடிக்க சென்றுள்ளார். மது குடித்துவிட்டு அதீத போதையில் வந்த அவர் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியிடம் சாக்லேட் உள்ளிட்ட தின்பண்டங்கள் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி தன்னுடன் பைக்கில் வருமாறு கூறி கடத்தி சென்றுள்ளார். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை காணாமல் பெற்றோர்கள் சுமார் 2 மணி நேரமாக தேடி வந்துள்ளனர். இரண்டு மணி நேரத்திற்கு பின்பு சிறுமியை அதே இடத்தில் இறக்கி விட சரவணன் வந்துள்ளார். அப்போதுதான் சிறுமியின் பெற்றோர் மற்றும் அப்போது பொதுமக்கள் அவரை தர்ம அடி கொடுத்து தோகைமலை போலீசார் வசம் ஒப்படைத்துள்ளனர். மேலும் தோகைமலை போலீசார் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையினால்தான் இத்தகைய பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு மது அருந்த ஒருவர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக வரும்போதும் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையினை அகற்ற வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கூறி தோகைமலை மணப்பாறை சாலையில் குறுக்கே அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அங்கு வந்த குளித்தலை டிஎஸ்பி போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.


