66 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 22 வயது இளைஞர்

 
rape

66 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 22 வயது இளைஞர்வீரகனூர் அருகே நேற்று மாலை துக்க  நிகழ்ச்சிக்கு நடந்து சென்ற 60 வயது மூதாட்டியை  பலாத்காரம் செய்ய முயற்சி செய்த 22 வயது பட்டதாரி வாலிபரை வீரகனூர் போலீசார் கைது செய்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Maharashtra: Minor girl gang-raped by 400 men including a Policeman over a  period of six months, 3 arrested


சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே உள்ள பகடப்பாடி வடக்கு காடு பகுதியில் வசிப்பவர் கருத்தாப்பிள்ளை .இவர் தனது குடும்பத்துடன் விவசாய தோட்டத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவரது தம்பி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துள்ளார். அந்த துக்க நிகழ்ச்சிக்காக நேற்று மாலை கருத்தாப்பிள்ளையின் மனைவி ஜெயலட்சுமி(60) விவசாய தோட்டம் வழியாக நடந்து சென்று  கொண்டு இருந்த போது அங்கு மறைந்திருந்த அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் ஸ்ரீதர் (22) என்பவர் மூதாட்டி ஜெயலஷ்மியை  வாயில் துணி வைத்து அடைத்து அருகில் உள்ள மக்காச்சோள தோட்டத்திற்கு தூக்கிச் சென்று பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது. 

அப்போது மூதாட்டி ஜெயலட்சுமி சத்தம் போடவே அவரது கழுத்தை வாலிபர் ஸ்ரீதர் நெறித்து கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவ்வழியாக வந்த தோட்ட உரிமையாளர் மக்காச்சோள காட்டில் சத்தம் கேட்கவே அவரது சென்ற இருசக்கர வாகத்தை நிறுத்திவிட்டு மக்காச்சோளம் தோட்டத்திற்கு ஓடி சென்று பார்த்துள்ளார். அப்போது வாலிபர் ஸ்ரீதர் மூதாட்டியை விட்டுட்டு தப்பி ஓட முயன்ற போது  வாலிபரை பிடித்து வீரகனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். மேலும் வலியால் துடிதுடித்த மூதாட்டியை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதை தொடர்ந்து பிடிப்பட்ட வாலிபர் ஸ்ரீதரை வீரகனூர் போலிசார் ஆத்தூர் மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் இன்று ஒப்படைத்தனர். மகளிர் காவல் நிலைய போலிசார் தீவிர விசாரணை செய்து ஸ்ரீதர் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிந்து போக்சோ சட்டத்தில் கைது செய்து ஆத்தூர் நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்த பட்டதாரி வாலிபர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.