கமிஷன் பிரச்சனையில் 60 வயது முதியவர் அடித்துக் கொலை

 
murder

திருமங்கலம் அருகே கமிஷன் பிரச்சனையில் 60 வயது முதியவர் கொலை செய்யபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder

 மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் நில விற்பனை புரோக்கர் ஆக 60 வயது முதியவர் குருசாமி , அவருடைய கூட்டாளிகளான மாயாவதாரன், செல்லப்பாண்டி ஆகிய மூவரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில், அத்தொழிலில் அப்பகுதியில் ஒரு வீடு விற்பனைக்கு வந்ததில்,  அதனை இவர்கள் மூவரும் அந்த வீட்டை ஒருவருக்கு விற்ற நிலையில், அதனுடைய கமிஷன் தொகையை குருசாமி தர மறுத்ததாகவும், அவரது கூட்டாளியான மாயாவதாரன் மற்றும் செல்லப்பாண்டி ஆகிய இருவரும் குருசாமி வீட்டுக்கு சென்று வாக்குவாதம் செய்த போது, குருசாமியை இருவரும் தள்ளி விட்டதில் நிலை தடுமாறி கீழே விழுந்து குருசாமியின் தலையின் பின்புறத்தில் காயம் ஏற்பட்டது.

காயம் ஏற்பட்ட குருசாமியை மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து குருசாமியை கொலை செய்த வழக்காக மாற்றப்பட்டு , மாயவதாரன் மற்றும் செல்லப்பாண்டியை தேடி வந்த நிலையில், இன்று காலை மாயா அவதாரத்தை கைது செய்தனர். தலைமறைவான செல்ல பாண்டியனை தேடி வருகின்றனர் . நில விற்பனை கமிஷன் தொகையில் ஏற்பட்ட பிரச்சனையில் நடைபெற்ற கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்யப்பட்ட குருசாமிக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள்  இருக்கின்றனர்.