60 நாட்கள் கள்ள உறவு கட்! கடுப்பில் குக்கரால் கணவர் தலையில் அடித்துக்கொன்ற பெண்

 
b,,

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் தூங்கிக் கொண்டிருந்த கணவனை தலையில் அடித்து கொலை செய்திருக்கிறார் மனைவி.   ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினம் மாவட்டம் மதுரவாடாவில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.  

 புது முதுகு முரளி என்பவர் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு ஸ்ரீகா குளம் மாவட்டத்தினை சேர்ந்த மிருந்துளாவை திருமணம் செய்து இருக்கிறார். தம்பதிக்கு ஏழு வயதில் ஒரு மகன் இருக்கிறான்.  

 முரளிக்கு தென்னாபிரிக்காவில் பேராசிரியர் பணி கிடைத்திருக்கிறது.   இதனால்  மனைவி, மகனை பிரிந்த் சென்று விட்டார்.   வீட்டில் மகனுடன் வசித்து வந்த மிருதுளாவுக்கு  சங்கர் என்ற 18 வயது இளைஞருடன் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது . இது கள்ள உறவாக மாறி இருக்கிறது.

jj

 இந்த நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி அன்று தென்னாப்பிரிக்காவில் இருந்து முரளி ஊர் திரும்பி இருக்கிறார்.   வெளிநாட்டிலிருந்து வந்திருக்க மனைவியிடம் மிருதுளா நெருக்கம் காட்டவே இல்லை.  இதனால்  மனைவி நடத்தையில் முரளிக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது .   கடந்த 16ம் தேதி அன்று தனது தாயை பார்க்க சென்றிருக்கிறார் முரளி .

அந்த நேரத்தில் கள்ளக்காதலனை அழைத்து  என் கணவர் 60 நாட்கள் விசாகப்பட்டினத்தில் இருப்பார் . அதனால் 60 நாட்கள் நாம் சந்திக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.  அப்போது எரிச்சலான அந்த இளைஞர்,   முரளியை தீர்த்து கட்டி விட்டால் எல்லா பிரச்சினையும் சரியாகிவிடும் என்று சொல்லி இருக்கிறார்.  இதற்கு மிருதுளாவும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். 

 அதன்படியே முரளி இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது குக்கரை எடுத்து வந்து தலையில் ஓங்கி அடித்து கொலை செய்திருக்கிறார்.  பின்னர் கள்ளக்காதலன் உதவியுடன் வயல் வெளியில் சடலத்தை வீசி விட்டு வந்திருக்கிறார்கள்.

 இரண்டு நாட்களுக்கு மீண்டும் கள்ளக்காதலுடன் கணவனை தூக்கிப்போட்ட இடத்திற்கு சென்று இருக்கிறார்.   அங்கே உடல் அழுகி கிடந்திருக்கிறது. அந்த உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.   இதற்கிடையில் தனது மகன் காணவில்லை என்று முரளியின் பெற்றோர் போலீசில் புகார் அளிக்க , போலீசார் மிருதுளாவிடம் துருவித் துருவி விசாரணை நடத்தியதில் கள்ளக்காதலுக்காக இந்த கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார்.  இதை அடுத்து அவரை கைது செய்துள்ளனர்.