விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை.. இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை

 
l

விளையாடிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில்  கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது திருச்சி மகிளா நீதிமன்றம்.

திருச்சி கோட்டை கீழ தேவதான பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி .  25 வயதான இந்த இளைஞர் கடந்த 2020 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.   இதனால் அச்சிறுமியின் பெற்றோர் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.   இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் செல்வமணியை கைது செய்துள்ளனர். 

j

 இது குறித்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தள்ளது.   23/7/20220இல் இந்த வழக்கில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.   நீதிபதி ஸ்ரீ வத்சன் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளார்.   இந்த வழக்கின் விசாரணைகள் முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

 அந்த தீர்ப்பில்,   விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை கடத்திச் சென்ற வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும்,  போக்சோ வழக்கில் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டனர்.   மொத்தம் 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 7000 அபராதம் விதித்து ஏக காலத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் செல்வமணி என்றும் உத்தரவில் கூறி இருக்கிறார் நீதிபதி.

 பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்சம் ரூபாய் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியிருக்கிறார் நீதிபதி.  இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் புலன் விசாரணையில் உறுதுணையாக இருந்த போலீசாரை திருச்சி மாநகர போலீஸ் ஆணையர் சத்திய பிரியா பாராட்டி இருக்கிறார்.