6 மாத குழந்தை அலறல்! ஓடிவந்த தாயை பார்த்ததும் 2 பேர் தப்பியோட்டம்

 
s

ஆறு மாத குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த தாயைப் பார்த்ததும் இரண்டு பேரும் தப்பி ஓடியிருக்கிறார்கள்.  டெல்லியில் நடந்து இருக்கிறது இந்த கொடூரம். போலீசாரின் தேடுதல் வேட்டையில் ஒருவர் பிடிபட்டுள்ளார்.   அந்த நபரிடம் துப்பாக்கி இருந்ததும் அவர் போலீஸாரை துப்பாக்கியால் தாக்க முயன்றதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 டெல்லியில் சம்யாபூர் பத்லி பகுதியில் 14 வயது மகள்,  ஆறுமாத இளைய மகள் ஆகியோருடன் வசித்து வந்திருக்கிறார் அந்தப் பெண்.   வேலைக்குச் செல்லும்போது இரண்டு மகள்களும் வீட்டில் இருந்திருக்கிறார்கள்.   வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது இரண்டு மகள்களும் வீட்டில் இல்லை.

g

 அதிர்ச்சி அடைந்த அப்பெண்,  அக்கம் பக்கத்தில் பதறி அடித்துக்கொண்டு தேடியிருக்கிறார் .  அப்போது பக்கத்து வீட்டுக்குள் இருந்து ஆறு மாத குழந்தையின் அழுகுரல் கேட்டு இருக்கிறது.  அங்கு சென்று பார்த்தபோது இரண்டு குழந்தைகளை இரண்டு பேர் பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்கள்.  தாயை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார்கள்.

 உடனே அந்தப் பெண் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வந்து போலீசுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.   போலீசார் வழக்கு பதிவு செய்து உடனடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது,  பத்லி மெட்ரோ ஸ்டேஷலில் 40 வயதுடைய ஒருவர் பிடிபட்டு இருக்கிறார்.  அவர் போலீசாரிடம் சரண் அடையாமல் இருக்க துப்பாக்கியால் போலீசாரை தாக்கியிருக்கிறார்.  உடனே போலீசார் பதில் தாக்குதல் நடத்த அந்த நபருக்கு காலில் குண்டு காயம் ஏற்பட்டிருக்கிறது . அவரை கைது செய்த போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

 தப்பியோடிய இன்னொரு நபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.   இந்த இரண்டு பேரும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட போது போதையில் இருந்திருக்கிறார்கள் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்திருக்கிறது . 

பிடிப்பட்டவரிடமிருந்த நாட்டுத் துப்பாக்கி தோட்டாக்கள் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.