பெற்ற மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கி மகளுக்கு குழந்தை பெற்றெடுத்த தாய்!

 
culprit

பெற்ற மகளை கள்ளக்காதலனுக்கு ஒரு வருடமாக விருந்தாக்கிய தாய், கர்ப்பமான மகளை வீட்டிலேயே வைத்து பிரசவம் பார்த்த கொடுமை ஓட்டேரியில் அரங்கேறியுள்ளது.

Sexual Assault Is More Than Rape

சென்னை குழந்தைகள் நல அமைப்பின் வடக்குப்பகுதி உறுப்பினர்  புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் புளியந்தோப்பில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தும்படியும் அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கோமதி இதுகுறித்து விசாரணை மேற்கொண்டார். 

விசாரணையின் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி வயது 40 இவரது கணவர் பாரதி இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பாரதி சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பு புவனேஸ்வரியை விட்டு சென்றுவிட்டார். இவர்களுக்கு தற்போது 17 வயதில் ஒரு மகள் உள்ளார். அதன் பின்பு புவனேஸ்வரிக்கு ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் வயது 50 என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. முத்துக்குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ள நிலையில், அவர்களை விட்டுவிட்டு புவனேஸ்வரி வீட்டிற்கு வந்து தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளார், 

இந்நிலையில் முத்துகமாருக்கு புவனேஸ்வரியின் 17 வயது மகள் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதனை முத்துக்குமார் புவனேஸ்வரியிடம் கூறியுள்ளார் புவனேஸ்வரியும் இதற்கு சம்மதம் தெரிவித்து தனது 17 வயது மகளை முத்துக்குமாருடன் உல்லாசமாக இருக்க அனுமதித்துள்ளார். கடந்த ஒரு வருடமாக முத்துக்குமார்  சிறுமியுடன் பலமறை உடலுறவு வைத்துக் கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்று காண்பித்தால் சிறுமியின் வயது தெரிய வரும் என்பதால் வீட்டிலேயே வைத்து வெளியே அனுப்பாமல் மெடிக்கல் ஷாப்பில் தரும் மாத்திரைகளைப் அவ்வப்போது வாங்கி கொடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் சிறுமியின் வயது மற்றும் சிறுமியின் கணவர் யார் என மருத்துவமனை நிர்வாகிகள் கேட்பார்கள் என்பதால் சிறுமிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்து உள்ளனர் சிறுமிக்கு வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது குழந்தை பிறந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் குழந்தைக்கு உடல் நிலை லேசாக பாதிக்கப்பட்டுள்ளது. அப்போது ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்கு குழந்தையை அழைத்துச் சென்றுள்ளனர் அப்போது அங்கிருந்த செவிலியர்கள் குழந்தை எங்கு பிறந்தது குழந்தையின் தந்தை பெயர் தாய் பெயர் என அனைத்தையும் கேட்டுள்ளனர். அப்போது குழந்தையின் தாய்க்கு 19 வயது ஆகிறது என கூறியுள்ளனர். சிறுமியின் ஆதார் கார்டை பார்த்த செவிலியர்கள், சிறுமிக்கு 17 வயதுதான் ஆகிறது என்பதை உறுதிப்படுத்தினர். 

சிறுமியின் தந்தை யார் எனக் கேட்டபோது புவனேஸ்வரி முத்துக்குமார் எனவும் வயது 50 எனவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக இதுகுறித்து குழந்தைகள் நல  அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர் அதன் பேரிலேயே குழந்தைகள் நல அமைப்பினர் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விசாரிக்க  செய்ததில் இந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. தற்போது குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உண்மை வெளியே தெரிந்ததால் முத்துக்குமார் மற்றும் புவனேஸ்வரி இருவரும் தலைமறைவாகிவிட்டனர். முத்துக்குமார் மற்றும் சிறுமியின் தாய் புவனேஸ்வரி ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த புளியந்தோப்பு  அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் இன்று காலை பொன்னேரியில் பதுங்கியிருந்த முத்துக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் தாய் புவனேஸ்வரியயையும் போலீசார் கைது செய்தனர்