குளிர்பானத்தில் மதுவை கலந்துகொடுத்து 16 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 5 இளைஞர்கள்

 
rape

முசிறி தாலுகாவை சேர்ந்த சிறுவியை 5 பேர் கூட்டாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சம்பவத்தில் தொடர்புடைய 3 நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Man Arrested On Rape Charge In Punjab's Phagwara

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகாவை சேர்ந்த ஒரு 16 வயதுடைய  சிறுமியை முசிறி அந்தரபட்டியை  பகுதியைச் சேர்ந்த உறவினரான வாலிபர்  ரெங்கநாதன் (21) என்பவர் தனது பைக்கில் அமர வைத்து காவிரி கரையோரத்தில் உள்ள தைலமரகாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.  அங்கு சிறுமிக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்ததாக கூறபடுகிறது. அதன் பின்னர் ரெங்கநாதன் சிறுகாம்பூர் அருகே செங்கொடி குடித்தெருவை மணி (எ) மணிகண்டன் மற்றும் நான்கு நண்பர்களை வரவழைத்துள்ளார். 

பின்னர் 5 பேரும் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அதனை செல்போனில் வீடியோவாகவும் படம் எடுத்துள்ளனர். பின்னர் வாலிபர்கள் சிறுமியை மிரட்டி வீடியோ படத்தை வெளியிட்டு விடுவேன் என கூறி மீண்டும் வெவ்வேறு இடங்களுக்கு வரவழைத்து மூன்று முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. கடந்த வருடம் சித்திரை மாதம் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிவதை கண்ட அவரது பெற்றோர்கள் திருச்சி மாவட்டத்தா சேர்ந்த  வாலிபர் ஒருவருடன் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். குழந்தை திருமணம் குறித்து தகவல் அறிந்த சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்கள்  காவல் நிலையத்தில் புகார் அளித்து சிறுமியை மீட்டு திருச்சியில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். தற்போது வரை சிறுமி காப்பகத்திலேயே இருந்து படித்து வருகிறார். 

இந்நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டதில் ஐந்து பேரில் ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோ வாட்ஸப் வைரலாக பரவியது.அதனைக் கண்ட சிறுமியின் பெற்றோர் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது மகளை நாசம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தார்.

இதையடுத்து காப்பகத்தில் இருந்து முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மகளிர் போலீசார்  சிறுமி விசாரணைக்கு அழைத்து வந்து நடந்த விபரங்களை கேட்டிருந்து புகார் மனு பெறப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து முசிறி அந்தரபட்டியை சேர்ந்த ரெங்கநாதன் மற்றும் சிறுகாம்பூரைச் சேர்ந்த மணி என்ற மணிகண்டன், சிறுகாம்பூர் தர்மா (எ) கணேஷ் உள்ளிட்ட மூவரையும்  கைது செய்துள்ளனர். 

தலைமறைவாக  உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில்  போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த வருடம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இருவரை போலீசார் தேடி வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.