ஒரே குடும்பத்தில் 5 பேர் தூக்கில் தொங்கிய கொடூரம்!

 
s


ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் தூக்கில் சடலமாக தொங்கி இருக்கிறார்கள்.  கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அந்தப் பெண் இரண்டாவது கணவர் மற்றும் தனது மூன்று குழந்தைகளுடன் தூக்கில் சடலமாக தொங்கியது கன்னூர் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

 கேரள மாநிலத்தில் கன்னூர் மாவட்டத்தில் உள்ளது வச்சல்.  இந்த பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜா .  இவருக்கு 12 ,10 , 8 ஆகிய வயதில் மூன்று குழந்தைகள்  இருந்தனர். கடந்த புதன்கிழமை அன்று தான் இவர் சஜி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து இருக்கிறார்.  திருமணத்திற்கு பின்னர் குழந்தைகள் உடன் இரண்டாவது கணவர் சஜி வீட்டிலேயே வசித்து வந்திருக்கிறார்.

sr

 இந்த நிலையில் தான் ஸ்ரீஜா, அவரது இரண்டாவது கணவர் ஷஜி மற்றும் 3 குழந்தைகள் ஆகிய ஐந்து பேரும் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.   ஐந்து பேரின் உடலையும் தூக்கில் இருந்து இறக்கிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.   மூன்று குழந்தைகளையும் முதலில் தூக்கிலிட்டு கொலை செய்து விட்டு பின்னர் ஸ்ரீஜாவும் சஜியும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசாரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

 சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு வந்த விசாரணையில், இரண்டாவது திருமணம் செய்த ஸ்ரீஜா,  எட்டு நாட்களில் மூன்று குழந்தைகளையும்  கொலை செய்து விட்டு,  ஸ்ரீஜா ஏன் தற்கொலை செய்து கொண்டார் . அவரின் இரண்டாவது கணவர் சஜியும் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் அப்பகுதியினர் இடையே தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மற்றும் உறவினர்களிடையேயும் தொடர் விசாரணையில் உள்ளனர் போலீசார்.