"ரொட்டி போட வந்த பெண்களை கூட்டி போய் .."ஐந்து ஆண்களிடம் சிக்கிய இரண்டு பெண்களின் கதி

 
women gang rape by five man


சமையல் வேலைக்கு வந்த இரு பெண்களை பலாத்காரம் செய்த ஐந்து பேரை போலீஸ் தேடி வருகிறது 

gang rape
மத்தியப் பிரதேசத்தின் மெயின்புரியில் வசிக்கும் நேத்ரம் மீனா மற்றும் அக்மல் மீனா மற்றும் இந்தர் மாலி ஆகியோர் அங்கு கல்யாணத்திற்கு சமையல் காண்ட்ராக்ட் செய்து வருகின்றனர் .அவர்கள் சமீபத்தில் ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை ,ஷியோபூர் மாவட்டத்தில் நடக்கும் ஒரு திருமண விழாவில் ரொட்டி தயாரிக்க கூட்டி சென்றார்கள் .அப்போது அந்த பெண்களை அவர்கள் மூவரும் அதே இடத்தில வைத்து பலாத்காரம் செய்துள்ளனர் .

அதன் பிறகு அந்த இரண்டு பெண்களையும் விஜேந்திர சிங் மற்றும் ஒரு போர்மேன் ஆகியோரும் பலாத்காரம் செய்துள்ளனர் .அதன் பிறகு அவர்கள் ஐந்து பேரும் அந்த பெண்களிடம் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்கள் .ஆனால் அந்த பெண்கள் அந்த இடத்திலிருந்து தப்பி வந்து அங்குள்ள காவல் நிலையத்தில் அவர்கள் மீது புகார் தந்தனர் .போலீசார் அந்த நபர்கள் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர் .இப்போது குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் தலைமறைவாக உள்ளனர், அவர்களைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று போலீசார் தெரிவித்தனர்.