5 ஆண் நண்பர்கள்.. ஓட்டலில் 10 ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கதி

 
gg

பத்தாம் வகுப்பு மாணவியை ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று ஐந்து ஆண் நண்பர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.   நடந்ததை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று மிரட்டி வீட்டின் அருகே விட்டுச் சென்று இருக்கிறார்கள்.   ஐந்து பேரில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்ற மூன்று பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

 டெல்லியில் குரு கிராம் பகுதியில் இருக்கும் அந்த ஓட்டலுக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியை அவருடன் படிக்கும் ஆண் நண்பர்கள் இரண்டு பேர் பைக்கில் அழைத்துச் சென்று இருக்கிறார்கள்.  பின்னர் மேலும் 3 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள்.

ll

 சனிக்கிழமை மதியம் 12:30 மணிக்கு பூங்காவுக்கு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்று இருக்கிறார் அந்த மாணவி. இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் பல இடங்களிலும் தேடிப் பார்த்து உள்ளனர்.   இரவு முழுவதும் தேடிப் பார்த்தும் மகள் கிடைக்காததால் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டின் அருகே மகள் உட்கார்ந்திருப்பது கண்டிருக்கிறார்கள்.

 இரவு முழுவதும் எங்கே சென்றாய் என்று சத்தம் போட்டு கேட்டிருக்கிறார்கள்.  அப்போது அந்த மாணவி அழுது கொண்டே நடந்ததை சொல்லி இருக்கிறார் .  தன்னுடன் படித்த இரண்டு நண்பர்கள் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றதாகவும் , அங்கே ஓட்டல் அறைக்கு சென்றதும் மேலும் 3 ஆண் நண்பர்கள் வந்து விட்டதாகவும்,  ஐந்து  நண்பர்களும் சேர்ந்து தன்னை கூட்டு பள்ளியில் வன்கொடுமை செய்து இதை வெளியே யாரிடமாவது சொன்னால் கொண்டு விடுவோம் என்று மிரட்டி வீட்டின் அருகே கொண்ட வந்து விட்டு விட்டுச்  சென்றதாகவும் சொல்லியிருக்கிறார்.

 அந்த மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் ஐந்து பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பழைய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்துள்ளனர் போலீசார்.   இதில் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.   மேலும் மூன்று குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.