இயற்கை உபாதை கழிக்க சென்ற 40 வயது பெண் கூட்டு பலாத்காரம்- 4 பேர் கைது
ராமநாதபுரம் அடுத்த புத்தேந்தல் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சென்ற 40 வயது பெண்ணை மது போதையில் இருந்த நான்கு பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் கொடுத்த புகாரின் பேரில் புதேந்தர் பகுதியை சேர்ந்த 4 பேரை கைது செய்த ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மஞ்சனமாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 29-ஆம் தேதி மாலை உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோவில் அச்சுந்தன்வயல் அடுத்த புத்தேந்தல் ரயில்வே தண்டவாளம் அருகே சென்று கொண்டிருந்தபோது இயற்கை உபாதையை கழிக்க புத்தேந்தல் காட்டுபகுதிக்கு ஆட்டோவில் இருந்து இறங்கி சென்றுள்ளார். அப்போது அங்கு மது அருந்தி கொண்டு மது போதையில் இருந்த புத்தேந்தல் பகுதியைச் சேர்ந்த புவனேஷ், முருகன், செல்வகுமார், குட்டி ஆகிய நால்வர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து அப்பெண் ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் நால்வரும் நாளை சிறையில் அடைக்கப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.