பெற்ற தந்தையே செய்த கொடூரம் - 4 வயது சிறுமி அனுபவித்த பாலியல் தொல்லை

 
ss

பெற்ற குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு நான்கு ஆயுள் தண்டனை இருபதாயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது போக்சோ நீதிமன்றம்.

விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த மகாராஜபுரம்.   இப்பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ்.   இவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் தனது நாலு வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.   இது குடும்பத்தினருக்கு தெரிய வந்ததை அடுத்து பெரும் பிரச்சனையாகி இருக்கிறது.   இதை இப்படியே விட்டால் கடைசி வரைக்கும் இந்த பாலியல் தொல்லை நீடிக்கும் என்பதை உணர்ந்த உறவினர்கள்,  சுந்தர்ராஜ் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்ய போலீசார் வழக்கு பதிவு செய்து சுந்தர்ராஜ் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர் .

sss

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.   ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்துள்ளது.   இந்த  வழக்கில் சுந்தர்ராஜன் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானதை அடுத்து நீதிபதி பூரண ஜெய ஆனந்த் தீர்ப்பு அளித்திருக்கிறார் .

su

பெற்ற குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை சுந்தர்ராஜுக்கு நான்கு ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பளித்து இருக்கிறார்.   இந்த தண்டையை  ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.   மேலும், 2 ஆயிரம் ரூபாய்  அபராதம் விதித்து தீர்ப்பளித்து இருக்கிறார்.   தமிழக அரசு பாதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்து உத்தரவிட்டு உள்ளார் நீதிபதி.