தலையில் பலத்த அடி.. சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் - ஈரோட்டை நடுங்கவைத்த சம்பவம்

 
ச் ச்

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே தலையில் பலத்த காயங்களுடன் உடல் அழுகிய நிலையில் சாக்கு முட்டையில் கிடந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆட்டையாம்பாளையம் பகுதியில் காஞ்சிகோவில்- அக்ரஹாரம் வரை செல்லும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பாசன கொப்பு வாய்க்காலின் மதகினை திறக்க வாய்க்கால் மேஸ்திரி வந்துள்ளார், அப்போது மதகு அருகே வெள்ளை நிற சாக்கு முட்டை இருப்பதைக் கண்டுள்ளார் மேலும் அதிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. தொடர்ந்து இது குறித்து சித்தோடு காவல்துறையினர் மற்றும் கங்காபுரம் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு போலீசார் சாக்கு மூட்டையை வாய்க்காலில் இருந்து மேலே எடுத்து பிரித்து பார்த்தபோது , தலையில் பலத்த காயங்களுடன் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் துணி மற்றும் 4,5 சாக்குகளால் சுற்றி கயிறு மூலம் உடல் கட்டப்பட்டு இருந்ததை கண்டு உள்ளனர். தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. கொலை செய்யப்பட்ட நபர் யார்? வேறு ஏதாவது இடத்தில் கொலை செய்யப்பட்டு இங்கு கொண்டு வந்து சடலம் வீசி செல்லப்பட்டதா? அல்லது இங்கேயே வைத்து கொலை செய்யப்பட்டு சடலத்தை வாய்க்காலில் தூக்கி வீசி விட்டு மர்ம கும்ப கும்பல் தப்பி ஓடியதா? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மீட்கப்பட்ட உடல் தண்ணீரில் வீசப்பட்டு சுமார் மூன்று நாட்கள் ஆகி இருக்கும் என போலீசார் முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா, சம்பவத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார், மேலும் மோப்ப நாய் காவேரி மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைத்து தடயங்களை சேகரித்து விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர்.