30 சிறுமிகள் துடிதுடிக்க கொலை! கொடூரனுக்கு வெறும் ஆயுள் தண்டனை

 
a

முப்பக்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து துடிதுடிக்க கொலை செய்த கொடூர குற்றவாளிக்கு வெறும் ஆயுத தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது நீதிமன்றம் . 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கஸ்கஞ்ச் என்கிற பகுதியைச் சேர்ந்தவன் ரவீந்தர் குமார்.  இவன் வேலை தேடி டெல்லியில் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறான்.  இவரின் தந்தை பிளம்பர் வேலை செய்து வந்திருக்கிறார்.  தாய்  வீட்டு வேலைகள் செய்து வந்திருக்கிறான்.

 உத்தரப்பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு வந்த சில நாட்களிலேயே மது ,கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையாகி இருக்கிறான் ரவீந்தர் . இதில் அவர் மிருகமாக மாறி இருக்கிறான்.   சிறுமிகள்,   பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய ஆரம்பித்திருக்கிறான்.  இதற்காக பத்து ரூபாய் நோட்டுகள்,  சாக்லேட்டுகளை வாங்கி வைத்திருக்கிறான்.  6 முதல் 12 வயது உடைய சிறுமிகளை சாக்லேட் கொடுத்தும்,  பத்து ரூபாய் கொடுத்தும் ஆசை வார்த்தை காட்டி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான் . 

r

சிறுமிகளை ,குழந்தைகளை ஒவ்வொரு முறையும் பாலியல் வன்கொடுமை செய்யும் போது உயிரோடு இருந்தால் அவர்கள் ஒத்துழைக்க மறுத்து அடம்பிடிப்பார்கள் என்று முதலில் கொலை செய்து விட்டு பின்னர்தான் பாலியல் பலாத்காரம் செய்வேன் என்று போலீசில்  அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருக்கிறான்.  சாலையோரத்தில் வசிக்கும் குழந்தைகள், கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள்,  குப்பை பொறுக்கும் கூலி தொழிலாளர்களின் குழந்தைகளைத்தான் இவன் குறிவைத்து கடத்தி இருக்கிறான்.

சிறுமிகள், குழந்தைகள் கிடைக்காத நாட்களில் 40 கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் நடந்து சென்று இந்த கொடூரத்தை நிகழ்த்தி வந்திருக்கிறான்.  பின்னர் தான் தனது வீட்டிற்கு திரும்புவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறான்.   தான் இப்படிப்பட்ட செய்கையில் ஈடுபட்டு வந்ததால் இரண்டு மாதங்களுக்கு மேல் யாரிடமும் வேலையை தொடராமல் இருந்திருக்கிறான்.   தனது இருப்பிடத்தையும் அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்திருக்கிறான்.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரைக்கும் 30க்கும் மேற்பட்ட குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.  இந்த நிலையில் தான் கடந்த 2015 ஆம் ஆண்டில் ஆறு வயது சிறுமியின் கொலை வழக்கை விசாரித்த போலீசார் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் ரவீந்தர் சிக்கினான்.   அவனிடம்  துருவித்துருவி விசாரணை நடத்திய போது தான் தன் குற்றங்களை  ஒப்புக்கொண்டான்.   டெல்லி, உத்தரப்பிரதேசம், அரியானா மாநிலங்களில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து துடி துடிக்க கொலை செய்ததை ஒப்புக்கொண்டான்.  

 இது தொடர்பான வழக்கு 8 ஆண்டுகள் நீடித்து வந்தது.  இந்த நிலையில் வழக்கின் விசாரணைகள் முழுவதுமாக முடிந்து இன்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.   இத்தனை சிறுமிகளை, குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த இந்த பாவிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வந்தது.   ஆனால் வெறும் ஆயுள் தண்டனை மட்டுமே விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது நீதிமன்றம்.