காதலியை கரம்பிடித்த 4வது நாளில் 2வது திருமணம்! மணக்கோலத்தில் இருந்தவரின் கையில் விலங்கு போட்ட போலீசார்

 
j

காதலியை திருமணம் செய்து கொண்ட நாலாவது நாளில் பெற்றோர் பார்த்த பெண்ணை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார் டூவீலர் மெக்கானிக் சுப்பிரமணி.  மாலையும் கழுத்துமாக இருந்த சுப்பிரமணியனை கைது செய்து செய்துள்ளனர் போலீசார்.

 கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி அருகே இருக்கும் எல். என். புரத்தில் டூ வீலர் மெக்கானிக் கடை நடத்தி வந்தவர் ரவி.  இவரின் மகள் ரம்யா.  ரவியும் ஒர்க்ஷாப்பில் ஆர். எஸ். மணி நகரைச் சேர்ந்த சுப்ரமணியன் என்கிற 31 வாலிபர் மெக்கானிக்காக வேலை செய்து வந்திருக்கிறார்.   தந்தையின் மெக்கானிக் கடைக்கு அடிக்கடி வந்து செல்லும் ரம்யாவுக்கும் சுப்பிரமணியனுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.  அது காதலாக மாறியிருக்கிறது.

 இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார்கள்.   திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை சொல்லி வந்ததால் ரம்யாவும் தனிமையில் சுப்பிரமணியனுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார். 

ட்

 இந்த நிலையில் சுப்ரமணியனுக்கு மார்ச் 27ஆம் தேதி கடலூர் பாதிரிக்குப்பம்  பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்தது தெரிய வந்திருக்கிறது.  இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த ரம்யா, கடலூர் எஸ்பி அலுவலகத்தில் சுப்பிரமணியன் மீது புகார் கொடுத்திருக்கிறார்.  இந்த புகாரை வாபஸ் பெற்றால் திருமணம் செய்து கொள்வேன் என்று சுப்பிரமணியன் சொன்னதால் ரம்யா அந்த புகாரை வாபஸ் பெற்றிருக்கிறார்.  அதன் பின்னர் 22 ஆம் தேதி அன்று விழுப்புரம் முத்துமாரியம்மன் கோவிலில் சுப்பிரமணியனுக்கும் ரம்யாவுக்கும் திருமணம் நடந்து இருக்கிறது. 

 திருமணம் நடந்த மறுநாளே சுப்பிரமணியனுக்கும் பாதிரிக்குப்பத்தைச் சேர்ந்த நிச்சயம் செய்யப்பட்ட அந்த பெண்ணுடன் திருவந்திபுரம் கோவிலில் நேற்று திருமணம் செய்ய ஏற்பாடு நடந்து இருக்கிறது.   இதை அறிந்ததும் மீண்டும் மகிழ்ச்சி அடைந்த ரம்யா பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதோடு இரவு 10 மணிக்கு சுப்ரமணியன் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டு இருக்கிறார் ரம்யா. 

 பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக சொன்னதை அடுத்து அதிகாலை 2 மணிக்கு தனது தர்னா போராட்டத்தை கைவிட்டு இருக்கிறார்.   சுப்ரமணியனை போலீசார் தேடி வந்திருக்கிறார்கள்.  திருவந்திபுரம் தேவநாத சாமி கோவிலில் திருமணம் நடைபெறுவதாக இருந்ததை அடுத்து போலீசார் அங்கே சென்றிருக்கிறார்கள்.  ஆனால் போலீசார் வந்து விடுவார்கள் என்று தெரிந்து திருமணத்தை கடலூர் மஞ்சக்குப்பம் மாரியம்மன் கோவிலில் வைத்து நடத்தி இருக்கிறார்கள். 

 பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் அங்கு விரைந்து இருக்கிறார்கள் .  அதற்குள் திருமணம் நடந்து மணக்கோலத்தில் நின்றிருக்கிறார் சுப்பிரமணியன். மணக்கோலத்தில் நின்றிருந்த சுப்பிரமணியனை மாலையும் கழுத்துமாக நின்றிருந்த அவரை நேற்று காலை 11:30 மணிக்கு கைது செய்து அழைத்துச் சென்று இருக்கிறார்கள்.