வெளியே மதபோதகர் போர்டு உள்ளே விபச்சாரம்: ஆண்களுடன் இருந்த தாயும், மகளும் சிக்கினர்

வெளியே மதபோதகர் போர்டு உள்ளே விபச்சாரம்: ஆண்களுடன் இருந்த தாயும், மகளும் சிக்கினர்

மத போதனை என்ற பெயரில் வீட்டிற்கு வெளியே மதபோதகர் என்ற போர்டு வைத்து உள்ளே விபச்சாரம் நடத்தி வந்த லால் சைன்சிங்(வயது43) போலீசில் சிக்கினார். ரெய்டின் போது சிக்கிய பெண்களில் தாயும் மகளும் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ந்தனர்.

வெளியே மதபோதகர் போர்டு உள்ளே விபச்சாரம்: ஆண்களுடன் இருந்த தாயும், மகளும் சிக்கினர்

கன்னியாகுமரி மாவட்டம் நிதிரவிளை அடுத்த எஸ்.டி. மாங்காடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ’மதபோதகர் லால் சைன்சிங்’ என்ற போர்டு தொங்க விடப்பட்டிருக்கிறது. அந்த வீட்டிற்குள் மதபோதனை நடைபெற்று வருவதாக இத்தனை நாளும் நினைத்திருந்தனர் அப்பகுதியினர்.

ஆண்களும் பெண்களும் அந்த வீட்டுக்குள் வருவதும் போவதுமாக இருந்ததைப் பார்த்த அப்பகுதியினர் மதபோதனைக்காக வந்து செல்கின்றனர் என்றே இத்தனை நாளும் நினைத்து வந்துள்ளனர். திடீரென அப்பகுதியினருக்கு ஒரு சந்தேகம் வந்துள்ளது. மத போதனை என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

வெளியே மதபோதகர் போர்டு உள்ளே விபச்சாரம்: ஆண்களுடன் இருந்த தாயும், மகளும் சிக்கினர்

இதையடுத்து குளச்சல் டி.எஸ்.பி. தங்க ராமன் உத்தரவின்பேரில் போலீசார் அதிரடியாக அந்த வீட்டிற்குள் ரெய்டு நடத்திய போது , நான்கு பெண்கள் , மூன்று 3 ஆண்கள் என 7 பேர் சிக்கினர். அந்த நான்கு பெண்களில் இரண்டு பேர் தாயும் மகளும் என்பதை அறிந்து போலீசார் அதிர்ந்தனர்.

லால் சைன்சிங் என்பவர்தான் மதபோதகர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தியது தெரிய வந்தது. சிக்கிய 7 பேரையும் பிடித்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.