ஒரே ஒரு தவறால் பறிப்போன இளம்பெண் உயிர்! பரிதவிக்கும் 7 வயது மகன்

 
s

பெங்களூரு அருகே ஆன்லைன் விளையாட்டுகளில் லட்சக்கணக்கான ரூபாயை இழந்ததாலும், அதனால் ஏற்பட்ட கடன் தொல்லையாலும் 28 வயதான இளம் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


நெலமங்களாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் ரஞ்சிதா. இவருக்கு அருண் என்பவருடன் சுமார் 10 ஆண்டுகளாகத் திருமணமாகியிருந்தது. கலபுரகியைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தத் தம்பதியினர், கடந்த ஐந்து ஆண்டுகளாக நெலமங்களாவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் ரஞ்சிதா சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி, அதில் கணிசமான அளவு பணத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் வாங்கியிருந்த சுமார் ₹15 லட்சம் கடனை அவரது கணவரும் தாயாரும் திருப்பி செலுத்தினர். இருப்பினும், அவர் தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடி, மேலும் மேலும் கடன் வாங்கியுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ரஞ்சிதா, தனது கணவர் வேலை விஷயமாக வெளியூருக்கு சென்ற நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து நெலமங்கலா ஊரகப் பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினர். சடலம் நெலமங்கலா அரசாங்கப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. போலிசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்திவருகின்றனர்.