21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- அரசு பள்ளி ஆசிரியரின் அட்டூழியம்
Jul 4, 2025, 16:00 IST1751625030000
நீலகிரியில் அரசு பள்ளியில் படிக்கும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் காத்தாடிமட்டம் அரசு பள்ளியில் படிக்கும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார் (50) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளியில் நடைபெற்ற பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு சென்ற போலீசாரிடம் மாணவிகள் அடுத்தடுத்து புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து விசாரணை நடத்திய போலீசார் போக்சோ சட்டத்தில் ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


