”தங்கையை காதலித்ததால் கொன்றோம்” சகோதரர்கள் பகீர் வாக்குமூலம்

 
கொலை

சேலம் அருகே காதல் விவகாரத்தில் 18 வயது பெண்ணின் சகோதரர் தாக்கியதில் அப்பெண்ணின் காதலன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கோணஞ்செட்டியூர் பகுதியில் வசிக்கும் சேட்டு என்பவரின்  18 வயதுள்ள ராஜேஸ்வரியை கடந்த ஒரு வருடமாக துக்கியாம்பாளையம் ஊராட்சி வடக்கு காடு பகுதியைச் சேர்ந்த சுப்பராயன் மகன் சக்திவேல் (வயது 24) என்ற வாலிபர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆவேசம் அடைந்த அந்த ராஜேஸ்வரின் அண்ணன் சதீஷ்குமார் (23) மற்றும் ராஜேஸ்வரின் சித்தி மகனான துக்கியாம்பாளையம் வடக்கு காடு முனியப்பன் மகன் மணிகண்டன் (17) ஆகிய இருவரும் சக்திவேலை துக்கியாம்பாளையம் வடக்கு காட்டிற்கு அழைத்து சென்று சரமாரி தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சக்திவேல் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் கிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இது குறித்து வாழப்பாடி  இன்ஸ்பெக்டர் உமாசங்கர் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு மேற்கொண்டார். பின்னர் கொலையில் தொடர்புடைய இருவரையும் கைது செய்தார். சக்திவேல் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  விசாரணையில், தங்கைக்கு செல்போன் வாங்கிக்கொடுத்து காதல் வலையில் வீசியதால் கொலை செய்தோம் என இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.