வெளியே வந்தால் தற்கொலை செய்துகொள்வேன்…ஏடிஎம் வாகனத்தின் கீழே தொங்கிக்கொண்டு சென்றவர் தந்த அதிர்ச்சி

 

வெளியே வந்தால் தற்கொலை செய்துகொள்வேன்…ஏடிஎம் வாகனத்தின் கீழே தொங்கிக்கொண்டு சென்றவர் தந்த அதிர்ச்சி

துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களுடன் தான் ஏடி.எம் மெசின்களுக்கு பணம் நிரப்பும் வாகனம் செல்லும், ஏடிஎம்களின் பணம் நிரப்பும்போதும் துப்பாக்கி ஏந்தியபடியே பாதுகாவலர்கள் நின்றிருப்பார்கள். அப்படி இருக்கையில் பணம்கொண்டு சென்ற வாகனத்தின் கீழே ஒருவர் தொற்றிக்கொண்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த இறையூரில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்புவதற்காக புதுச்சேரியில் இருந்து வாகனம் புறப்பட்டுச்சென்றது. இறையூர் ஏடிஎம்மில் பணத்தை நிரப்பிவிட்டு பெண்ணாடம் நோக்கி சென்றது வாகனம். பெண்ணாடம் மேம்பாலத்தில் வாகனம் சென்றபோது, அந்த வாகனத்தின் கீழே ஒருவர் தொங்கிக்கொண்டு சென்றதை சாலையில் நின்றிருந்தவர்கள் பார்த்துவிட்டு, சம்பந்தப்பட்ட வங்கிக்கு தகவல் கொடுத்தனர்.

வெளியே வந்தால் தற்கொலை செய்துகொள்வேன்…ஏடிஎம் வாகனத்தின் கீழே தொங்கிக்கொண்டு சென்றவர் தந்த அதிர்ச்சி

வங்கியின் மூலம் அந்த வாகனத்தின் டிரைவருக்கு போன் செய்ததில், அவர் உடனே வாகத்தை நிறுத்திவிட்டு கீழே குனிந்த பார்த்தபோது, ஒருவர் தொங்கியபடியே இருந்தார்.

அவரை வெளியே வரச்சொன்னதும் , வெளியே வந்தால் தற்கொலை செய்துகொள்வேன் என்றார். இதனால் வேறு வழியின்றி போலீசுக்கு தகவல் கொடுக்க, போலீசார் வந்து அந்த நபரை வெளியே இழுத்தபோது, மதுபோதையில் இருப்பது தெரியவந்தது.

அவர் எந்த ஊரைச்சேர்ந்தவர், எந்த இடத்தில் எப்படி வாகனத்தின் கீழே என்று தொங்கியபடி சென்றார் என்ற விபரங்கள் எல்லாம் அவர் மதுபோதை தெரிந்துவிடும் என்கிறார்கள்.