17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவுக்கு பயந்து தற்கொலை

 
suicide

மன்னாா்குடி அருகே 17 வயது சிறுமியை  கர்ப்பமாக்கிய வாலிபர் தூத்துக்குடியில் தனியார் லாட்ஜில்  தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Grappling With The Rise Of Work-Related Suicide During The Pandemic: How To  Support Yourself And Fellow Coworkers

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த  மூவாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (32). நெல் வியாபாரியான இவர் அதே பகுதியை  17 வயதுடைய மாணவி ஒருவரை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி, நெருங்கி பழகியதால் மாணவி கர்ப்பமானார். மகளின் போக்கில் மாற்றம் கண்ட அவரது  தாய் அது குறித்து  விசாரித்ததில் நடந்த சம்பவத்தை சிறுமி  அழுதபடி கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் தன்  மகளை கண்டித்தார். இதனால் விரக்தி அடைந்த மாணவி நேற்று  காலை வீட்டில் இருந்த பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு  மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு  சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.  

இதுகுறித்து  தகவல் அறிந்து டிஎஸ்பி அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ்  உத்தரவின் பேரில்  அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அன்னை அபிராமி விசாரணை செய்து மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான  சுரேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.  இந்த நிலையில், தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்து  சுரேஷ் தலைமறைவாகி நேற்று தூத்துக்குடி சென்று அங்குள்ள தனியார் லாட்ஜில் இரவு அறை எடுத்து தங்கினார். நேற்று மதியம் வரை அவர் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அங்கிருந்த ஊழியர்கள் ஜன்னல் வழியாக பார்த்ததில் அவர் சடலமாக  தூக்கில்  தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தூத்துக்குடி போலீசார் சுரேஷ் உடலை கைப்பற்றி அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து மூவாநல்லூர் உள்ள அவரது உறவினருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். போலீஸ் விசாரணைக்கு பயந்து சுரேஷ் தூக்கு மாட்டி தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம்  மூவாநல்லூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.