8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- 17 வயது சிறுவன் கைது
Aug 29, 2025, 20:39 IST1756480198224
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தில் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர், அவரது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பக்கத்து வீட்டை சேர்ந்த 17 வயது சிறுவன் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளான். இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து, 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தில் காங்கேயம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.


