16 வயது சிறுமி.. தமிழக பகுதியில் இருந்து அதிகம் பேர்.. 27 பேர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது

 
j

16 வயது சிறுமியை வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர் கணவன் - மனைவி.   ஆன்லைன் மூலமாகவும் விளம்பரம் செய்து தமிழகத்தில் இருந்து வார இறுதி நாட்களில் அதிகம் பேர் வந்து சென்று இருக்கிறார்கள்.    கடலூரைச் சேர்ந்த அந்த சிறுமி மீட்கப்பட்டிருக்கிறார்.  27 பேர் மீது போக்சோ சட்டம் பாய்ந்து இருக்கிறது.   புதுச்சேரி மாநிலத்தில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் சுற்றுலா நகரம் என்பது ஒரு பக்கம் இருக்க,  அங்கு மது அருந்திவிட்டு உல்லாசமாக இருப்பதற்காக வேண்டி வார இறுதி நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பயணிகள் குவிந்து வருகிறார்கள்.  இவர்களை குறி வைத்து விபச்சார கும்பலும் பணம் பார்த்து வருகின்றது.   இதனால் புதுச்சேரி மாநிலத்தில் விபச்சார தொழில் கொடிகட்டி பறக்கிறது என்கிறார்கள்.   இதை தடுக்க  காவல்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதிலும் இந்த தொழிலில் இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது .

l

புதுவையில் கோரிமேடு எல்லைக்கு உட்பட்ட மோகன்  நகரில் கடலூரை சேர்ந்த கணவன் மனைவி இரண்டு பேர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அந்த வீட்டில்கடலூரை சேர்ந்த 16 வயது  சிறுமியை அழைத்து வந்து அந்த வீட்டில் தங்க வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்திருக்கிறார்கள்.  அந்த சிறுமியின் விருப்பத்திற்கு மாறாத கட்டாயப்படுத்தி பாலாஜியும், உமாவும் விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர்.

 சிறுமியை வைத்து  பாலியல் தொழில் நடக்கும் விபரம் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிய வந்ததை அடுத்து போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பாலாஜி , பச்சையப்பன்  உள்பட 16 பேரை கைது செய்துள்ளனர் .  அவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 8 வேலையை பிடிக்க போலீசார் தீவிரங்காட்டிய வருகின்றனர்.

 விபச்சார தொழிலுக்கு மிகப் பெரிய நெட்வொர்க்கும் அமைக்கப்பட்டிருந்தது.   ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தும் புரோக்கர் மூலமாகவும் வாடிக்கையாளர்கள் அழைத்து வரப்பட்டிருந்திருக்கிறார்கள்.   வார இறுதி நாட்களில் தமிழகத்தில் இருந்து அதிகம் பேர் வந்து சென்றிருக்கிறார்கள்.   தலைமறைவாக இருக்கும் உமா உள்பட 8 பேரை பிடிக்க போலீசார் தீவிரங் காட்டி வருகின்றனர்.

 கடலூரை சேர்ந்த 16 வயது சிறுமியை புதுச்சேரியில் தங்க வைத்து விபச்சார தொழில் ஈடுபடுத்தியதில் 27 பேர் மீது போக்சோ சட்டம் வாய்ந்ததை அடுத்து புதுச்சேரியில் வேறு எங்கெல்லாம் இது போன்று வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம் நடக்கிறது என்று போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி இருக்கின்றனர்.