கிரிக்கெட்டில் விக்கெட் எடுத்த இளைஞர்! ஸ்டம்பால் அடித்தே கொன்ற 15 வயது சிறுவன்

 
murder

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் கிரிக்கெட்டில் விக்கெட் எடுத்த இளைஞரை ஸ்டம்பால் அடித்தே கொன்ற 15 வயது சிறுவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி புது காலணி தெருவை சேர்ந்த தேவந்திரனின் மகன் அஜித்குமார் (23). இவர் நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள வயல் வெளியில் நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அஜித்குமார் பந்துவீச 14 வயது சிறுவன் ஒருவன் பேட்டிங் செய்துள்ளார். அஜித்குமார் பந்து வீச்சில் சிறுவன் தன் விக்கெட்டை பறிக்கொடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 


இதுகுறித்து தன் மற்றொரு சகோதரரான மற்றொரு சிறுவனிடம் அந்த 14 வயது சிறுவன் கூறவே, ஆத்திரமடைந்த அந்த சிறுவன் ஸ்டம்பால் அஜித்குமாரின் தலையில் தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார் அஜித்குமார். உடனே சக நண்பர்கள் அவரை மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அஜித்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.