பெற்றோருக்கு தெரியாமல் சாட்டிங்… பேஸ்புக் மூலம் காதல்… சவுக்கு தோப்பில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்!- வந்தவாசி இளைஞர்களால் நடந்த கொடுமை

 

பெற்றோருக்கு தெரியாமல் சாட்டிங்… பேஸ்புக் மூலம் காதல்… சவுக்கு தோப்பில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்!- வந்தவாசி இளைஞர்களால் நடந்த கொடுமை

பெற்றோருக்கு தெரியாமல் செல்போனில் பேஸ்புக் மூலம் சாட்டிங் செய்த மாணவியை ஆசைவார்த்தை கூறி காதல் வலையில் விழவைத்துள்ளார். பின்னர் சவுக்கு தோப்புக்கு வரவழைத்த இளைஞர், தனது நண்பர்கள் மூலம் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் உமா (பெயர் மாற்றம்). 15 வயதான இவர், கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த நிலையில் பெற்றோரின் செல்போன் மூலம் அவர்களுக்கு தெரியாமல் ரகசியமாக பேஸ்புக் பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது, வந்தவாசி அடுத்த இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த இலியாஸ் (20) என்ற வாலிபர் அறிமுகமாகியுள்ளார். பின்னர் இருவரும் தினந்தோறும் சாட்டிங் செய்துள்ளனர். ஒருநாள் உமாவிடம், உன்னை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார் இலியாஸ். இதை நம்பிய உமா, அடிக்கடி இலியாஸை வெளியில் சென்று சந்தித்துள்ளார்.

பெற்றோருக்கு தெரியாமல் சாட்டிங்… பேஸ்புக் மூலம் காதல்… சவுக்கு தோப்பில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்!- வந்தவாசி இளைஞர்களால் நடந்த கொடுமை

இதனிடையே, கடந்த 24-ம் தேதி உமாவை வந்தவாசி புறவழிச் சாலையில் உள்ள சவுக்குத் தோப்பு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார் இலியாஸ். அங்கு உமாவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் தனது நண்பர்கள் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பர்கத் (24 ), கீழ் சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா (22)ஆகியோரை சவுக்கு தோப்புக்கு அழைத்துள்ளார். அவர்கள், உமாவை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் உமாவை தோப்பிலேயே போட்விட்டு அந்த கும்பல் சென்றுவிட்டது. உடைகள் கிழிந்த நிலையில், அழுதுகொண்டே தோப்பில் இருந்து வெளியே வந்துள்ளார் உமா. அப்போது, நடந்த சம்பவத்தை அங்கு நின்றவர்களிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, உமாவுக்கு அவர்கள் மாற்று துணி வாங்கிக்கொடுத்ததோடு, பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பதறியபடி அங்கு வந்த பெற்றோர், மகளின் நிலையை பார்த்து கதறி அழுதனர். பின்னர் மகளை வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதையடுத்து, வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உமாவின் பெற்றோர் புகார் அளித்தனர்.

பெற்றோருக்கு தெரியாமல் சாட்டிங்… பேஸ்புக் மூலம் காதல்… சவுக்கு தோப்பில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்!- வந்தவாசி இளைஞர்களால் நடந்த கொடுமை

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா மற்றும் வந்தவாசி காவல்துறையினர் சம்பவ நடந்த சவுக்கு தோப்பு பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதையடுத்து, உமாவை பாலியல் வன்கொடுமை செய்த இலியாஸ், பர்கத், சூர்யா ஆகியோரை கோக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆன்லைன் வகுப்பு நடக்கும் நிலையில், செல்போன் வாங்கிக் கொடுத்துள்ள பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் அதனை சரியாகத்தான் பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால் வந்தவாசி சிறுமிக்கு நடந்ததுபோன்ற அதிக வாய்ப்பு இருக்கிறது. கவனம் பெற்றோர்களே!