60 வயதானவர் என்றும் பாராமல் அந்த திருநங்கையை தூக்கிக்கொண்டு ஓடிய 15 பேர்

 
gf

அந்தத் திருநங்கைக்கு 60 வயதாகிறது.   வயதானவர் என்று கொஞ்சம் கூட நினைக்காமல் 15 பேர் கொண்ட வெறிபிடித்த கும்பல்  காரில் கடத்திச் சென்று இருட்டான பகுதிக்கு தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.   இதில் அந்த திருநங்கை வலி தாங்க முடியாமல் கதறி அழுத போதும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் யாரும் காப்பாற்ற வரவில்லை.  ரத்த காயங்களுடன் வீடு வந்து சேந்திருக்கிறார் அந்த திருநங்கை.

 ஆந்திர மாநிலத்தில் கடப்பாவில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.   ஒய்.எஸ். ஆர் கடப்பா மாவட்டத்தில் புலி வெந்துலா நகரத்தில் அனந்தப்பூர் மாவட்டம் கதிரிக்கு  செல்லும் வாகனங்களை இரண்டு திருநங்கைகள் மடக்கி வசூலித்து வந்திருக்கிறார்கள்.   அப்போது அவர்கள் அருகே இரண்டு கார்கள் வந்து நின்றன. 

ட்

 வழக்கம் போல் பணம் வசூலிக்க திருநங்கை சென்ற போது அந்த கார்களில் 15க்கும் மேற்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள் . 30 வயதுடைய திருநங்கையை கிண்டல் செய்து கையை பிடித்து காருக்குள் தள்ளி இருக்கிறார்கள்.  அவர் விபரீதத்தை உணர்ந்து தான்  தப்பி உயிருக்கிறார்.   ஆனால் 60 வயதான திருநங்கை அந்த கும்பலிடம் சிக்கிக் கொண்டிருக்கிறார்.  

 அந்த திருநங்கையை  காரில் தூக்கிக்கொண்டு போன கும்பல் இருட்டான பகுதிக்கு தூக்கிச் சென்றிருக்கிறது.  15 பேரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.   இதில் வலி தாங்க முடியாமல் அந்த திருநங்கை அலறி இருக்கிறார்.   ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் யாரும் காப்பாற்ற வரவில்லை.  வெறி அடங்கிய பின்னர் அந்த கும்பல்  அதுவாகவே அங்கு இருந்து கிளம்பிச் சென்ற பின்னர் ரத்த காயங்களுடன்  உயிர்பிழைத்து வந்திருக்கிறார் . தற்போது காவல் நிலையத்தில்  புகார் சொல்ல, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.