14 வயது மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை - பாதிரியார் கைது

 
க்

14 வயது பள்ளி மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார்.  போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி அருகே உள்ளது கோணம்பட்டி கிராமம்.  இக்கிராமத்தில் தனியார் காப்பகம் இயங்கி வருகிறது.  பள்ளி மாணவ, மாணவிகள் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களும் இந்த காப்பகத்தில் தங்கி இருக்கின்றனர்.

ட்

 காப்பகத்தின் கண்காணிப்பாளராக பாதிரியார் ஆண்ட்ரூஸ் இருந்து வந்துள்ளார் . 

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறைக்காக மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று இருக்கிறார்கள் . பொங்கலூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி ஒருவரும் தனது சொந்த ஊருக்கு சென்றிருக்கிறார்.    அப்போது தனது பெற்றோரிடம் பாதிரியார் ஆண்ட்ரூஸ் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் , இதை வெளியே செல்லக்கூடாது என்று மிரட்டுவதாகவும் சொல்லிவிட்டு அழுது இருக்கிறார்.

 இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள்.   புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாதிரியார் ஆண்ட்ரூசை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 பள்ளி மாணவிக்கு பாதிரியார் ஒருவர் தொடர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.